தமிழ்நாடு
சென்னையில் இரவு முதல் கொட்டித்தீர்த்த கனமழை...
சென்னை மற்றும் கிண்டி, மீனம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழகத்தில் நாளை வரை 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும், நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆந்திரா, ஒடிசா பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் மத்திய, மேற்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதன்படி தி.நகர், கிண்டி, மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் பெருங்களத்தூர், பகுதிகளிலும் கனமழை பெய்தது. விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.