வருகின்ற 29-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஹமூன் புயல், இன்று அதிகாலை தெற்கு சிட்டகாங் அருகில் கரையைக் கடந்தது. இந்நிலையில், வடக்கு கேரளா மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் இரண்டு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாகவும், அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வரும் 29-ம் தேதி மதுரை, திண்டுக்கல், திருச்சி, மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.