சூறைக்காற்றுடன் கனமழை - வாகன ஓட்டிகள் அவதி...

சூறைக்காற்றுடன் கனமழை - வாகன ஓட்டிகள் அவதி...

சென்னை புறநகர் பகுதிகளில் இடைவிடாமல் கொட்டி தீர்க்கும் மிக கனமழையால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
Published on

சென்னை | மாண்டஸ் புயல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் நேற்றிலிருந்து மழையானது பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் தற்போது கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக வானம் முழுவதும் இருள் சூழ்ந்து மிக கனமழையானது வெளுத்து வாங்கி வருகிறது.

இதனால் பணி முடிந்து வீட்டிற்கு செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் மேலும் வானம் முழுவதும் இருள் சூழ்ந்து காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களில் முகப்பு விளக்கை எரிய விட்டபடி வாகனங்களை இயக்கி செல்கின்றனர்.

இடைவிடாமல் கொட்டி தீர்த்து வரும் கனமழை காரணமாக சாலையில் ஆங்காங்கே மழை நீர் குலம் போல தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் சாலையின் நடுவே  தேங்கியுள்ள தண்ணீரை பீச்சி அடித்தபடி வாகனங்களை இயக்கி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

இடைவிடாமல் வானம் இருள் சூழ்ந்து சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் சென்னை புறநகர் பகுதியில் முழுவதிலும் வானம் இருள் சூழ்ந்து உள்ளதால் இரவு நேரம் போல காட்சியளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com