"இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.." வெளுத்து வாங்கும் மழை.. சென்னைக்கா? - நிபுணர்கள் இதுவரை கணித்துள்ளது என்ன?

இது வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, நவம்பர் 16-ஆம் தேதி மாலை வாக்கில் மத்திய வங்கக்கடலில் சூறாவளி புயலாக (cyclonic storm) மேலும் வலுப்பெறக்கூடும்
representational image of chennai getting rain
"இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.." வெளுத்து வாங்கும் மழை.. சென்னைக்கா? - நிபுணர்கள் இதுவரை கணித்துள்ளது என்ன?representational image
Published on: 
Updated on: 
1 min read

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தப் பகுதியுடன் தொடர்புடைய சூறாவளிச் சுழற்சி, கடல் மட்டத்திலிருந்து 5.8 கி.மீ உயரம் வரை பரவியுள்ளது.

இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, நவம்பர் 14-ஆம் தேதி நன்கு அடையாளப்படுத்தப்பட்ட குறைந்த காற்றழுத்தப் பகுதியாக (well-marked low-pressure area) மாறக்கூடும்.

மேலும், நவம்பர் 15, 2026 அன்று காலை வாக்கில் அதே பகுதியில் இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக (depression) வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது.

அதனைத் தொடர்ந்து, இது வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, நவம்பர் 16-ஆம் தேதி மாலை வாக்கில் மத்திய வங்கக்கடலில் சூறாவளி புயலாக (cyclonic storm) மேலும் வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் நவம்பர் 18-19 தேதிகளில் தமிழகத்தில் கனமழை கொடுக்கலாம் என கணிக்கப்படுகிறது. ஆனால் சரியாக எந்த திசையில் செல்லும், சென்னைக்கு பாதிப்பு வருமா என்பது குறித்து தெளிவான விளக்கங்கள் இல்லை.

தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், "பாதை குறித்து தெளிவு பெற இன்னும் 2 நாட்களே உள்ளன! வானிலை மாதிரிகள் மெதுவாக நவம்பர் 18-19 தேதிகளில் கரையைக் கடக்கும் விதமாக தெற்கு திசையில் நகர்கின்றன.

இந்த நிலையில் கணிக்கப்பட்ட அனைத்துப் பாதைகளையும் வெளியிடவில்லை, ஏனெனில் அது தேவையற்ற குழப்பத்தை மட்டுமே உருவாக்கும்.

முடிவுகளுக்கு வருவதற்கு முன், அடுத்த சில மாதிரி சோதனைகளுக்காகக் காத்திருப்போம்." எனப் பதிவிட்டுள்ளார். விரைவில் புயலின் பாதை குறித்து தெளிவான அறிவிப்பு வரும் என காத்திருப்போம்.

representational image of chennai getting rain
``கேக் ஊட்டும் முதல்வர்.. குழந்தைகளின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்க வேண்டாமா?.. கடலூரில் மட்டும் 12 பேர் மாயம்" - வானதி சீனிவாசன் கண்டனம்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.