
அறங்காவலர்கள் தேர்வு தொடர்பாக அனைத்து கோயில்களுக்கும் ஒரே மாதிரியான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் மகாதேவன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 23 மாவட்டங்களில் குழு நியமிக்கப் பட்டுள்ளதாகவும், அறங்காவலர் பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, பழைய விண்ணப்ப படிவங்களை நீக்கவும், ஒரே மாதிரியான விண்ணப்பங்களை இணையதளத்தில் சனிக்கிழமை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அறநிலையத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.