பாரம்பரிய உடையில் ஹாக்கி அணி கேப்டன்கள்!

பாரம்பரிய உடையில் ஹாக்கி அணி கேப்டன்கள்!
Published on
Updated on
1 min read

தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் விளையாட்டு  துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஹாக்கி அணியின் கேப்டன்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் கோப்பை போட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய ஹாக்கி விளையாட்டு சங்கம் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் கடந்த 3 ஆம் தேதி தொடங்கி வரும் 12 ஆம் தேதி வரை  நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், சீனா, கொரியா ஆகிய 6 நாடுகளின் அணிகள் மோதி வருகின்றனர்.

இந்நிலையில் மேயர் ராதா கிருஷ்ணன் மைதானத்தில், 6 அணிகளின் கேப்டன்களுடன்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துரையாடி, கேப்டன்களுடன் குழு புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர், ஹாக்கி அணியின் கேப்டன்கள், ஹாக்கி விளையாட்டுச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து கலந்து கொண்டனர். இதில் இளைஞர் நலமுடன் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, இந்தியா ஹாக்கி விளையாட்டு சங்க தலைவர் டயாப் இக்ரம்,  பொருளாளர் சேகர் மனோகரன், செயலாளர் பொலோனாத் சிங் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com