வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு..! கவலையில் இல்லத்தரசிகள்!!

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு..! கவலையில் இல்லத்தரசிகள்!!

சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 3 ரூபாய் அதிகரித்து, 1008 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது. 
Published on

கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தை காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை உயர்த்திய வண்ணம் உள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து தமிழகத்தில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த 7 ஆம் தேதி வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு ஆயிரம் ரூபாயை கடந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை  ஆயிரத்து 8 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களின் விலை-யும் 8 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை 2 ஆயிரத்து 507 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டரின் விலை அதிகரித்து வருவது நடுத்தர மக்களை கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையும் அதிகரித்துள்ளதால் உணவுப்பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு உள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com