தெருவில் செல்கிற நாய் தேர்தலில் நிற்பேன் என்று சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்....திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு...!!

தகுதி உடையவர்கள் தான் தேர்தலில் நிற்க வேண்டும் , தெருவில் செல்கிற நாய் நானும் நிற்பேன் என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தெருவில் செல்கிற நாய் தேர்தலில் நிற்பேன் என்று சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்....திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு...!!
Published on
Updated on
1 min read

அதிமுக உட்கட்சி தேர்தலை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் அதிமுக சார்பாக கிளைக் கழக நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி வட்டக் கழக நிர்வாகிகள் ஆகிய பதவிகளுக்கு வேட்புமனு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில்  மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் என 30 பேர் பரிந்துரை செய்த பிறகுதான் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் அதிமுகவில் ஜனநாயகம் இல்லை வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவரை தாக்கியுள்ளனர் என்று குற்றம் சாட்டுகின்றனர். தகுதி உடையவர்கள் தான் தேர்தலில் நிற்க வேண்டும், எங்கோ தெருவில் செல்கிற நாய் நானும் நிற்பேன் என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என சர்ச்சையாக பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், நடைபெற உள்ள உள்ளாட்சி நகராட்சி தேர்தலில் ஒற்றுமையுடன் செயல்பட்டால் அனைத்து இடங்களிலும் வெல்ல முடியும். ஜனநாயகம் அதிமுகவில் தான் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்தது. அதிமுகவில் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என்றார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com