"ராமேஸ்வரத்தில் அனுமதி இல்லாமல் பள்ளி எவ்வாறு செயல்படுகிறது" நீதிபதிகள் கேள்வி!

"ராமேஸ்வரத்தில் அனுமதி இல்லாமல் பள்ளி எவ்வாறு செயல்படுகிறது" நீதிபதிகள் கேள்வி!
Published on
Updated on
1 min read

ஆரம்பப் பள்ளி எவ்வாறு அனுமதி இல்லாமல் செயல்படுகிறது என உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி உயர் நீதிமன்ற மதுரை கிளைகள் தாக்கல் செய்த பொதுநல வழக்க ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், "ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதியில்  ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் வித்யாலயா என்ற தனியார் பள்ளி பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது தனியார் பள்ளிகள் அரசின் உரிய விதிமுறைகளை பின்பற்றி பள்ளிக் கல்வித் துறையில் சான்றுகள் பெற்று நடத்த வேண்டும் என்பது அரசின் விதி. 

ஆனால் கோபி என்பவருக்கு சொந்தமான இந்த ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் வித்யாலயா பள்ளியில் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கடந்த ஐந்து வருடங்களாக எவ்வித அரசின் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த பள்ளியில் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கும் உரிய தகுதிகள் இல்லை. அரசின் அனுமதி இல்லாததால் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் விளையாட்டு மைதானம் உட்பட அடிப்படை வசதி எதுவும் இல்லை. இவ்வாறு சட்ட விதிகளுக்கு எதிராக உரிய அனுமதி இல்லாமல் இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்த பகுதி மக்களுக்கு இது தெரியாததால் தங்களது குழந்தைகளை இங்கு சேர்த்து வருகின்றனர். இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே உரிய அனுமதியின்றி செயல்படும் இந்த பள்ளி செயல்பட தடைவிதித்து உத்தரவிட வேண்டும்" என மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நடைபெற்ற விசாரணையில் மனுதாரர் தரப்பில் பள்ளி அரசின் உரிய  அனுமதி இல்லாமல் செயல்படுவதற்கான ஆவணங்களை தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், ஆரம்பப் பள்ளி எவ்வாறு அனுமதி இல்லாமல் செயல்படுகிறது என்பது குறித்து பள்ளி கல்வித்துறை செயலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com