“இரவு முழுவதும் கேட்ட அலறல் சத்தம்” - குழிக்குள் விழுந்த குடும்பம்.. ஒரே நேரத்தில் உயிரிழந்த கணவன் மனைவி!

நேற்று இவர்கள் குடும்பத்துடன் திருநள்ளாறு கோவிலுக்கு சென்றுள்ளனர்.
“இரவு முழுவதும் கேட்ட அலறல் சத்தம்” - குழிக்குள் விழுந்த குடும்பம்.. ஒரே நேரத்தில் உயிரிழந்த 
கணவன் மனைவி!
Admin
Published on
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (வயது 40), இவருக்கு திருமணமாகி ஆனந்தி என்ற மனைவியும், 15 வயதில் தீக்ஷிதா என்ற மகளும் உள்ளனர்.நேற்று இவர்கள் குடும்பத்துடன் திருநள்ளாறு கோவிலுக்கு சென்றுள்ளனர். திருநள்ளாறில் சாமி தரிசனம் செய்து முடிக்கவே மாலை நேரம் ஆனதால், மீண்டு வீடு திரும்புவதற்கு இரவு மூவரும் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர்.

அப்போது சூரியநல்லூர் பகுதியில் சாலை மேம்பாட்டிற்காக தோண்டப்பட்ட குழியில் நிலை தடுமாறி விழுந்துள்ளனர். இரு சக்கர வாகனம் கவிழ்ந்த வேகத்தில்  அங்கு பிரிட்ஜ் கட்ட போடப்பட்டிருந்த அடித்தளத்தில் கணவன் மற்றும் மனைவியின், தலை மோதி, சம்பவ இடத்திலேயே இருவரும் ரத்தவெள்ளத்தில் மிதந்து உயிரிழந்தனர்.

பலத்த காயமடைந்த சிறுமி காப்பாற்றும் படி குரல் எழுப்பியும் இரவு நேரம் என்பதால் அவ்வழியே யாரும் செல்லவில்லை. பின்னர் விடிந்த பிறகு அவ்வழியே சென்ற கல்லூரி மாணவர்கள் சிலர், சிறுமியின் குரல் கேட்டு குழிக்குள் சென்று சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளார்.

கல்லூரி மாணவர்கள் போலீசில் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கணவன் மனைவி  இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். கணவனும் மனைவியும் விபத்தில் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com