மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்-மனைவிக்கு நேர்ந்த பரிதாபம் !! பதைபதைக்கும் வீடியோ காட்சி...

கோபிசெட்டிபாளையம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற  கணவன், மனைவி இருவரும் லாரி மோதிய விபத்தில்  உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
மோட்டார் சைக்கிளில்  சென்ற கணவன்-மனைவிக்கு நேர்ந்த பரிதாபம் !! பதைபதைக்கும் வீடியோ காட்சி...
Published on
Updated on
1 min read

கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள  பங்களாபுதூர் எருமைகுட்டை அண்ணாநகரை சேர்ந்தவர்கள்  பெருமாள், கீதா தம்பதி. இவர்கள்  இருவரும் விவசாய கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு   8  வயதில் ரிதன்யா என்ற மகளும்,  5 வயதில் மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். 

இந்நிலையில், வழக்கம்போல்  வேலை முடிந்ததும்  தம்பதி இருவரும்  வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அப்போது, வீட்டில் உள்ள தொலைக்காட்சியில் கேபிள் வயர் அறுந்து விட்டதால், டிவி பார்க்க முடியவில்லை என  பிள்ளைகள் கூறி உள்ளனர். 

அதைத்தொடர்ந்து பெருமாள் புதிய கேபிள் வயர் வாங்குவதற்காக  பைக்கில் கிளம்பிபோது,  கீதாவும் கடைக்கு வருவதாக கூறவே, இருவரும் பைக்கில் டி.என்.பாளையத்திற்கு சென்று உள்ளனர். அப்போது கோவையில்  இருந்து அந்தியூர் நோக்கி சென்ற லாரி எதிர்பாராத விதமாக பெருமாள், கீதா தம்பதி சென்ற பைக் மீது நேருக்கு நேர் மோதியது.  விபத்தில்  பெருமாளும், அவரது மனைவி கீதாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பங்களாபுதூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரி டிரைவரை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், லாரி மோதிய விபத்தில் தம்பதி இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com