
புளியந்தோப்பு பி.எஸ் மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ராஜேஷ்வரி எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தற்காலிக பணியாளராக இருந்தார்.
இவர்களது இரு குழந்தைகைளும் உறவினர் வீட்டில் இருக்கும் நிலையில், ராஜேஸ்வரி யாரிடமோ செல்போனில் நீண்ட நேரம் பேசியதனால் சந்தேகம் அடைந்த முருகன் இந்த நேரத்தில் யாருடன் பேசுகிறாய் எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அத்துடன் ஆடு வெட்டும் கத்தியால் மனைவியை சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ராஜேஸ்வரியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துகமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.