சந்தேகத்தால் நிகழ்ந்த விபரீதம்...மனைவி முகத்தை பிளேடால் வெட்டிய கணவன்...!

சந்தேகத்தால் நிகழ்ந்த விபரீதம்...மனைவி முகத்தை பிளேடால் வெட்டிய கணவன்...!
Published on
Updated on
1 min read

சென்னை அருகே மனைவி மீதான சந்தேகத்தில் மாறு வேடத்தில் சென்று அவரது முகத்தை பிளேடால் அறுத்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த குமாரசாமி என்பவர் வரலாற்றுப் பேராசியராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னை விட 21 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்த நிலையில், சமீபகாலமாகவே மனைவியை  சந்தேகத்துடன் பார்த்து வந்ததாகத் தெரிகிறது.  இதன் காரணமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மாறு வேடமணிந்து சென்ற குமாரசாமி, மனைவியின் முகத்தை பிளேடால் அறுத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். இது குறித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளைக்கொண்டு பெண் மீது தாக்குதல் நடத்தியது குமாரசாமி என்பதைக் கண்டறிந்து அவரைக் கைது செய்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com