
இதனை தொடர்ந்து தற்போது அன்புமணிக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சியை அகற்ற வேண்டும், இந்தியா அரசியலமைப்பு சட்டத்தால் குடி மக்களுக்கு வழங்கப்பட்ட 10 வகையான உரிமைகளை மீட்பதற்காக தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் மேற்கொள்ளப்படுவதாகவும் அறிவித்திருந்தார்...
இந்த பயணம் பாமக நிறுவனர் ராமதாஸின் பிறந்த நாளான ஜூலை 25-ஆம் நாள் மாலை சென்னையை அடுத்த திருப்போரூரில் தொடங்கவுள்ள அன்புமணியின் இந்தப் பயணம் தமிழகத்தின் முக்கியத் தொகுதிகள் வழியாக பயணித்து, நவம்பர் 1ஆம் தேதி தருமபுரியில் நிறைவடையவுள்ளது.
நாளை முதல் தமிழக முழுவதும் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் அன்புமணி ராமதாஸ் கட்சித் தொண்டர்களை சந்திக்க இருந்தார். இந்த உரிமை மீட்பு நடை பயணத்திற்காக அன்புமணி தரப்பிலான பாமகவினர் தீவிரமாக வேலைபார்த்து வரும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணிக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த சூழலில்தான் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று பத்திரிகையாளர்க்ளுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் “கால நிலை மாற்ற பாதிப்புகளை எதிர்கொள்ளும் கடலோர மாவட்டங்களை மேம்படுத்தும் திட்டத்தில் 16 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது, மற்றொரு மோசமான சூழல் உள்ளது. அதுதான் மதுவுக்கு அடிமையாகும் நிலை. வீதிக்கு வீதி அரசாங்கமே மதுக்கடைகளை நடத்தி வருவதால் சமுதாயமே சீரழிந்து வருகிறது. மக்கள் பலர் போதைக்கு அடிமைப்பட்டு கிடக்கும் நிலை மாற வேண்டும். விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அரசு பள்ளியில் மதுவுக்கு எதிராக பாடம் நடத்தியதற்காக அவர் மீதே மாணவர்கள் மது பாட்டில்களை வீசிய சம்பவம் நடந்துள்ளது. மதிய இடைவெளிக்குப் பிறகு 4 மாணவர்கள் மது குடித்து விட்டு பள்ளிக்கு வந்துள்ளனர். இதனை எப்படி தமிழக அரசு எதிர் கொள்ளப் போகிறது?
மதுப்போதையில் தகராறு செய்த மகனை தந்தையே கொலை செய்துள்ளார். படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைத்து விடுவோம் என திமுக அரசு கொடுத்த வாக்குறுதி காற்றில் பறக்கிறது. நெடுஞ்சாலையில் பெட்டிக் கடைகளை போல் பெருகியுள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்தி பாமக வெற்றி பெற்றது. இளைஞர் சமுதாயமே போதைக்கு அடிமையாகி சாகிறதை எப்படி பொறுத்து கொள்ள முடியும், பேசினார். தொடர்ந்து பேசிய அவர்,
பாமகவின் புதிய தலைவராக 30.25 முதல் நானே பொறுப்பேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன். நம் கட்சியின் தலைமை அலுவலகம் சென்னையி இருந்ததை மாற்றி தைலாபுரத்திலேயே தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. வேறு எங்கும் தலைமை அலுவலகம் இல்லை. இந்த தலைமை அலுவலகத்திற்குதான் கட்சி நிர்வாகிகள் வர வேண்டும். வேறு யாரும் தலைமை அலுவலகத்தை நடத்தினால் அது சட்டத்திற்கு புறம்பானது.
சிறப்பு பொதுக் குழு முடிவு செய்தது அடிப்படையில் நிறுவன தலைவராக நானே செயல்பட்டு வருகிறேன்.
கெளரவ தலைவராக ஜி.கே.மணி, செயல் தலைவராக அன்புமணி நியமிக்கப்பட்டு தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. யாராவது அவர்களின் பணியை செய்ய விடாமல் தடுத்தால் அவர்கள் எல்லாம் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி இல்லாமல் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு அதிகார தோரணையோடு வலம் வந்தால் அது சட்டத்திற்கு புறம்பானதாகும்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்... மீண்டும் தர்மமே வெல்லும்..
சூதும் வாழ்வும் வேதனை செய்யும்...அதனால் திட்டவட்டமாக பாமக கொடியை வேறு யாரும் பயன்படுத்த கூடாது. என் பெயரை போட கூடாது என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். 25ம் தேதியுல் இருந்து நடை பயணம் போவதாக சொல்லி இருக்கிறார்கள்.. நடவடிக்கை எடுக்க டிஜிபியிடம் சொல்லி இருக்கிறோம். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் நடை பயணத்தை தடை செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.