

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகில் வாக்காளர் பட்டியல் SIR சிறப்பு தீவிர திருத்தத்தை உடனடியாக நிறுத்த கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.
அதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், “வாக்காளர் திருத்தம் எதற்காக இந்த அரசு கொண்டு வருகிறது. போலி வாக்காளர்களை நீக்குவதற்காக கொண்டு வந்தோம் என்று சொல்கிறார்கள். போலி வாக்காளர்கள் என்றால் யார்? இத்தனை ஆண்டு காலமாக போலி வாக்காளர்கள் இல்லையா? போலி வாக்காளர்கள் ஒரு தொகுதியில் மட்டும் தான் இருக்கிறார்கள் நாடு எங்கும் போலி வாக்காளர்கள் இல்லையா. ஈரோட்டில் நடந்த இடைத் தேர்தலில் கள்ள ஓட்டு போட்டது தேர்தல் ஆணையத்திற்கு தெரியுமா தெரியாதா.. காசுக்கு வாக்கு வாங்கப்பட்டது தெரியுமா தெரியாதா.. இது எல்லாம் நடந்து இருக்கிறது. இவ்வளவு அவசரமாக, குறுகிய காலத்தில் (ஒரு மாதத்தில் 5 கோடிக்கும் அதிகமான வாக்காளர் பட்டியலைச்) சரிபார்ப்பது சாத்தியமில்லை என்று தெரிந்தும், இது "ஆட்சியில் இருப்பவர்கள் தங்களுக்கான வாக்காளர்களைத் தேர்வு செய்கிறார்கள்" என்ற நிலைமைக்கு வழிவகுக்கும். கொளத்தூரில் 8,000 போலி வாக்குகள் செலுத்தப்பட்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதைக் குறிப்பிட்டு, தேர்தலுக்குப் பிறகு இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
வாக்குச் சீரமைப்பு போன்ற முக்கியமான ஜனநாயகப் பணிக்கு, அங்கன்வாடி, சுகாதாரத் துறை போன்ற வேறு துறைப் பணியாளர்களை (BLO-வாக) நியமிப்பது இந்தப் பணியின் பொறுப்பைக் குறைக்கிறது. வாடகை வீட்டில் வசிப்பவர்கள் இடமாற்றம் காரணமாகப் பட்டியலில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
மேலும், பீகாரில் 81 லட்சம் பேர் வாக்களிக்கும் உரிமையை இழந்தது போல், தமிழ்நாட்டிலும் நிகழலாம் என்றும், ஒரு கோடி பேர் வாக்குரிமையை இழக்க நேரிடலாம். பிப்ரவரி 7-ஆம் தேதி இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், தவறாக நீக்கப்பட்டவர்கள் மீண்டும் வாக்கைச் சேர்ப்பதற்கு அவகாசம் இருக்காது.இந்த SIR ல் மக்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒரு குழப்பமான படிவமாக இருக்கிறது. தற்போது 100 -ல் 60 பேர் வாடகை வீட்டில் தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் எப்படி போய் இந்த படிவத்தை கொண்டு போய் சேர்க்க முடியும். இது எல்லாம் சர்வதிகார போக்கு ஆகும்.மதிப்புமிக்க மக்களின் உரிமை பறிபோகிறது. இதையெல்லாம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இது சரி பார்க்கணும் சொல்லி இருக்க வேண்டும்.ஆனால் அவசர அவசரமாக இதையெல்லாம் செய்கிறார்கள்.
இதை SIR யை திமுக அரசு கொண்டு வரவில்லை.பாஜக அரசு தான் கொண்டு வந்துள்ளது. SIR யை இப்போது சட்டப்பேரவை கூட்டி இப்போதைய சரி செய்து விட முடியாது. பீகாரில் மத்திய அரசு நினைத்ததை நடத்தி விட்டார்கள். இந்தச் சிறப்புத் திருத்தம் "ஜனநாயகப் படுகொலை” அனைத்துக் கட்சிகளும் இணைந்து இதைப் புறக்கணிக்க வேண்டும், அரசுக்கு ஒத்துழைக்கக் கூடாது.
இந்த SIR ல் நான் நிறுத்துகிறே வேட்பாளர்களுக்கு வாக்கு இருக்குமா இல்லையா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையமே இல்லாமல் ஒழிப்பது தான் இதற்கெல்லாம் சரியாகும்” என அவர் பேசியுள்ளார்.
தமிழ்நாடு முழுக்க அதிமுக, பாஜக -வை தவிர அனைத்து கட்சிகளும் SIR -க்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.