

நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த அக்டோபர் 4ம் தேதி போரூர் அருகே தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடத்தினார். நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்பு போரூரில் நடந்தது. இந்த சந்திப்பில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் பகுதி நிர்வாகிகள் என 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், நற்பணி இயக்கம் யாருக்கும் போட்டியாகவோ, யாரையும் எதிர்ப்பதற்காகவோ இல்லை என்றும், நம்மால் முடிந்த உதவிகளை அனைவருக்கும் செய்வதே இந்த அமைப்பின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து தனது பயணம் குறித்து பேசிய சிவகார்த்திகேயன், "நற்பணி இயக்கம் ஆரம்பிச்சாச்சு இத எப்படி செய்யணும் நிறைய ஆசைகள் நிறைய கனவுகள் இருந்தது. ஆனா முதல்ல இது ஏன் இருக்கணும், எதுக்காக இது என்ன செய்ய போறோம்? இப்படி பல கேள்விகள் இருந்திருக்கும். யோசிச்சு பார்த்தா நான் யார்? ரொம்ப சாதாரணமான ஒரு ஆள். இங்க தமிழ்நாட்டில் கனவோட ஆசையோட லட்சியத்தோட இருக்கும் கோடிக்கணக்கான இளைஞர்கள் மாதிரிதான் நானும் ஒருத்தன். ஆனா, மக்கள் எல்லாரும் சேர்ந்து இப்படி ஒரு இடத்தையும் இந்த பெயர், புகழ், வசதி எல்லாத்தையுமே கொடுத்திருக்கீங்க.
தொடர்ந்து பேசிய அவர், “எனக்கு சினிமா பின்பலம் கிடையாது இதுக்கு முன்னாடி இந்த அனுபவம் கிடையாது. ரொம்ப பெரிய பணக்கார குடும்பத்தில் இருந்து வந்தவங்க கிடையாது. நான் ஹீரோவாக, குட்டி குட்டி படங்கள் ஜாலியான படங்கள் பண்ணிரலாமுனு நினைச்சேன். ஆனா மக்கள், அதெல்லாம் கிடையாது நீங்க எல்லாமே பண்ணுங்க நீங்க மாஸாக பண்ணுங்கன்னு சொன்னீங்க, எல்லாரும் சேர்ந்து கை தட்டி தூக்கிட்டு வந்து கொடுத்த இடம் தான் இது.
நீங்க எல்லாரும் என்ன செல்ப் மேட்னு சொன்னீங்க, நிச்சயமா நான் ‘Self Made’ கிடையாது.. நான் ‘People Made’ மக்களால் உருவாக்கப்பட்டவன் நான். 2012ல இந்த சினிமாக்குள்ள வரும்பொழுது நானும் விஜய் சேதுபதி மட்டும்தான் அவுட்சைடர் சினிமா பின்புலம் இல்லாம உள்ள வந்தது. அந்த டைம் 80% பேர் எங்களுக்கு முன்னாடி இருந்த ஜெனரேஷனை சேர்ந்த சினிமா குடும்ப பின்னணியில் இருந்து தான் வந்திருந்தாங்க. டிவி-யில் இருந்து எப்படி ஒருத்தர் ஹீரோவா வரலாம்? ஆங்கர் எப்படி ஹீரோ ஆகலாம்? மிமிக்ரி செய்தவர் எப்படி ஹீரோ ஆகலாம்? என்று இருந்தது. ஆனா மக்கள் அந்த கேள்வியை கேட்டதே இல்லை, நம்மில் இருந்து ஒருத்தன் ஏன் ஹீரோ ஆக கூடாதான்னு சொல்லி என்ன கை தட்டி தூக்கிட்டு வந்துங்க இங்க நிக்க வச்சிருக்கீங்க.
அதனால் எனக்கு கொடுத்த மக்களுக்கு ஏதாவது திருப்பி செய்ய வேண்டும் என்பதற்காக தான் நான் டிரஸ்ட் ஆரம்பித்தேன். தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் நான் மட்டுமே செய்துவிட முடியாது அதுக்கு பலம் வேண்டும்.. அந்த பலம்தான் நீங்க. இப்போது செய்வதை தொடந்து செய்யுங்கள் என்று ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
அதையடுத்து இந்த நற்பணி இயக்கத்தில் செய்யும் வேலைகளில் எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. யாரை விட பெரியவங்கன்னு காட்டுவதற்கோ இல்ல.. யாரையும் எதிர்ப்பதற்கோ இல்லை” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்