
2026 அரசியல் களம் தமிழக வரலாற்றில் மிக முக்கியமான ஒரு தேர்தலை சந்திக்கவுள்ளது. இதுவரை நாம் பார்க்காத தனித்துவமான தேர்தலாக வருகிற சட்டமன்ற தேர்தல் இருக்கும் என அனைவருமே எதிர்பார்க்கின்றனர்.
2முறை வெற்றிக்கு பிறகு மக்கள் திமுக மீது மிகுந்த அதிருப்தியில் உள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும்,மாநிலத்தில் காவல்துறையின் கைகள் தான் ஓங்கியிருந்தது. பெண்கள், குழந்தைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது, நிர்வாக ரீதியாகவும் பல குளறுபடிகள் உள்ளன, மக்கள் உண்மையிலாட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். கூட்டணி பலமாக உள்ளது என்னதான் கூட்டணி பலமாக இருந்தாலும் ஆட்சி நன்றாக நடைபெறவில்லையெனில் எத்தனை கூட்டணி வைத்தாலும் வீண் தான்.
இந்த அமளி துமளிகளுக்கு இடையில் தான், தமிழக வெற்றி கழகம்என்ற கட்சியிற் நடிகர் விஜய் உருவாக்கியுள்ளார். விஜய்க்கு ஒரு நல்ல வரவேற்பு கிடைத்தது, முதல் தேர்தலிலேயே கிட்டத்தட்ட 12% வாக்குகளை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விஜய் இன்னமும் காலத்திற்கு வரவில்லை. கவின் படுகொலை நடந்தது, தூய்மை பணியாளர் போராட்டம் நடக்கிறது, ஒரு மாநாடு போட்டால் எல்லா பிரச்சனைகளையும் ஒரே அடியாய் பேசிவிடலாம் என்று நினைக்கிறார் போல..
அதிமுக பாஜா கூட்டணி உறுதியான தில் இருந்து எழுகின்ற பேச்சு என்னவென்றால், தவெக -வும் நாம் தமிழர் கட்சியும் கூட்டணி அமைக்கும் என்று. மேலும் ஏற்கனவே சீமானிடம் ஒரு 8% வாக்கு வாங்கி உள்ளது. சீமானும் விஜயும் இணைந்தால் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு என அரசியல் விமரசகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர், ஆனால் வரும் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்கப் போவதில்லை என உறுதியாக கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “நான் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் நம்பிக்கையை பெற்றவன். விஜய் வந்த உடனே நாதக -விற்கு ஓட்டு குறைந்துவிடும், அவர் அவ்வளவுதான் என பயம் காட்டுகின்றனர், இப்படி எல்லாம் என்ன சொன்னாலும், யாருடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை. எம் முன்னோர் செய்த தவறை செய்யபோவதுமில்லை, மபொசி, ஆதித்தனார், நிறுவனர் ராமதாஸ், விஜயகாந்த், திருமாவளவன், வைகோ என எம் முன்னவர் செய்த தவறை நான் ஒருபோதும் செய்யமாட்டேன். செத்து சாம்பலானாலும் தனியாகத்தான் சாவோம்” என திட்டவட்டமாக பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.