திருவாரூர் மாவட்ட மத்திய நூலகத்திற்கு நடைபாதை விரிவுபடுத்தப்படுமா? பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

திருவாரூர் மாவட்ட மத்திய நூலகத்திற்கு நடைபாதை விரிவுபடுத்தப்படுமா? பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Published on
Updated on
1 min read

திருவாரூர் மாவட்ட நூலக பாதை விரிவாக்க பணிக்காக கோரிக்கை வரப்பெற்றால் புஞ்சை தரிசிலிருந்து நில மாற்றம் செய்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், திருவாரூர் மாவட்ட மத்திய நூலகத்திற்கு நடைபாதை விரிவுபடுத்தப்படுமா? என  கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருவாரூர் மாவட்டத்தில் மைய நூலகம் கட்டப்பட்டு பணி தொடங்கப்பட்டுள்ளதோடு, இன்றைய முதலமைச்சர் அன்றைய உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும் போது திறந்து வைத்தார் என்றும், பத்தாயிரம் சதுர அடி பரப்பளவில் இந்த நூலகம் இயங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், இந்த நூலகம் மறு ஆய்வு செய்யப்பட்டு வருவாய் அலுவலரின் சர்வே ஆய்வு அடிப்படையில் திருத்திய நிலம் மற்றும் ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் பொது பாதையின் இரு புறமும் புஞ்சை தரிசு நிலமானது வருவாய்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், மாவட்ட நூலக பாதை விரிவாக்க பணிக்காக இன்று வரை கோரிக்கை மனு வரவில்லை, அப்படி மனு வந்தால், மீதமுள்ள புஞ்சை தரிசிலிருந்து நிலமாற்றம் செய்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com