கொடுத்தா கொடுத்ததுதான்...வாரிசுகளுக்கு வழங்கும் சொத்தில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!!

பிரிவு 23ன் கீழ் சொத்து பரிமாற்றம் செல்லாது என அறிவிக்க இரண்டு அத்தியாவசிய முன்நிபந்தனைகள் உள்ளன.  அதில் ஒரு நிபந்தனை என்னவென்றால், சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு பரிமாற்ற ஆவணம் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
கொடுத்தா கொடுத்ததுதான்...வாரிசுகளுக்கு வழங்கும் சொத்தில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!!
Published on
Updated on
1 min read

ஒருமுறை கொடுத்த சொத்தை பாதுகாவலர்(கார்டியன்) திரும்பப் பெற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலச் சட்டத்தின் கீழ், மாற்றப்பட்ட சொத்தில் நன்கொடையாளரைக் கவனித்துக்கொள்ளும் நிபந்தனை இல்லை என்றால், சொத்தை திரும்பப் பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நிபந்தனைகள்:

நீதிபதி ஆர் சுப்ரமணியம் கூறுகையில், பிரிவு 23ன் கீழ் சொத்து பரிமாற்றம் செல்லாது என அறிவிக்க இரண்டு அத்தியாவசிய முன்நிபந்தனைகள் உள்ளன எனக் கூறியுள்ளார். அதில் முதல் நிபந்தனை என்னவென்றால், சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு பரிமாற்ற ஆவணம் எழுதப்பட்டிருக்க வேண்டும் எனவும் இரண்டாவது நிபந்தனையாக இடமாற்றம் செய்பவர் வகிக்க வேண்டிய பொறுப்பு சரி செய்யப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.  மேலும், இந்த நிபந்தனைகளில் ஒன்று பூர்த்தி செய்யப்படாவிட்டாலும் ஆவணங்கள் செல்லாது என்று கூறி எஸ்.செல்வராஜ் சிம்சனின் ரிட் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.

ஜீவனாம்சம் மட்டுமே:

மனுதாரர் தனது மகனிடமிருந்து ஜீவனாம்சம் கோரினால் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.  மேலும் சிவில் நீதிமன்றத்தில் சொத்து பரிமாற்ற ஆவணத்தை ரத்து செய்யக் கோரிக்கை வைக்கலாம் எனவும் அதுவும் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலச் சட்டத்தின் கீழ் அவர்களை பராமரிக்கத் தவறிய குற்றச்சாட்டு இருந்து அதில் பராமரிப்பு தீர்ப்பாயம் திருப்தி அடைந்தால் மட்டுமே அத்தகைய சொத்து பரிமாற்றத்தில் மோசடி செய்யப்பட்டதாகக் கருதப்படும் என்றும் நீதிபதி கூறியுள்ளார். 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com