தமிழர்களை சீண்டிப்பார்த்தால்  உள்ளே உள்ள தமிழ் உணர்வும், சுயமரியாதையும் வீர்கொண்டு எழும்!!!-எம். பி கனிமொழி

தமிழர்களை சீண்டிப்பார்த்தால்  உள்ளே உள்ள தமிழ் உணர்வும், சுயமரியாதையும் வீர்கொண்டு எழும்!!!-எம். பி கனிமொழி
Published on
Updated on
1 min read

சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் விடுதியில் சென்னை சங்கமம் கலைஞர்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடிய  திமுக துணைப் பொதுச்செயலாளர் எம். பி கனிமொழி.

உரிமை யாருக்கும் இல்லை :

தமிழகம் தமிழ்நாடு என இரண்டுமே சொல்லிக் கொண்டு தான் இருந்தோம். பல்வேறு போராட்டத்திற்கு பிறகு தான் தமிழ்நாடு என அண்ணா பெயரை வைத்தார். தமிழ்நாடு என சொல்லக்கூடாது எனும் உரிமை யாருக்கும் இல்லை

தமிழர்கள் தங்களின் உணர்வை பிரதிபலிக்கும் விதமாக வீடுகளில் தமிழ்நாடு வாழ்க என கோலமும்,  சமூக வலைத்தளத்தில் பதிவிட்டும் வருகின்றனர். தமிழர்களை சீண்டிப்பார்த்தால்  உள்ளே உள்ள தமிழ் உணர்வும் சுயமரியாதையும் வீர்கொண்டு எழும். 

இந்தியா என்ற அடையாளத்தின்  கீழ் உள்ள மாநிலங்களின் தனித்த பண்பாடு கலாச்சாரம் மொழி என தனித்த அடையாளங்களை அழிந்து போக வேண்டும் என சிலர் நினைப்பார்கள், அதன் ஒர் அங்கம் தான் தமிழ்நாடு எனும் சர்ச்சையும் என கூறியுள்ளார் .

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com