
நெல்லையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட 6 ஆயிரம் வழக்குகளில் 1,500 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டதாக மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதை தடுக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாமதமின்றி நீதி கிடைக்கவும், தேசிய சட்டப்பணிகள் மூலம் மக்கள் நீதிமன்றங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நெல்லைக்கு உட்பட 9 தாலுகாவில் 25 அமர்வுகளில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவருமான குமரகுரு தலைமையில், நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து, குடும்ப நல வழக்குகள், காசோலை மோசடி உள்ளிட்ட வழக்குகளில் உடனடி தீர்வு காணப்பட்டது.