புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள்...!

புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள்...!

Published on

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

ஆங்கிலபுத்தாண்டு சிறப்பு வழிபாடு:

சென்னை, மாதவரத்தில் உள்ள தேவாலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு, சிறப்பு பிரார்த்தனை செய்தனர். 

அதேபோல், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதிகளில் அமைந்துள்ள புனித மிக்கேல் தேவாலயம், கன்மலை கிறிஸ்து தேவாலயம், மீட்பர் இமானுவேல் தேவாலயம் உள்ளிட்ட பல ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு கூடுகை நடைபெற்றது.  

தூத்துக்குடி, மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. அதேபோல், பனிமயமாதா ஆலயத்தில் பங்குதந்தை குமாரராஜா தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் திரளான கிறிஸ்தவ மக்கள் திருப்பலியில்  கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். 

புதுக்கோட்டை மாவட்டம், மங்கனூரில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் சாதி மத பாகுபாடு இன்றி ஏராளமான பெண்கள் கோலாட்டமாடி ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர். இந்த சிறப்பு கூட்டு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com