

2026 அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது கூட்டணி பேச்சுக்கள், கட்சி தவால்கள், அரவணைப்பு வெறுப்பு செயல்பாடுகள் என ஒவ்வொரு நாளும் எதோ ஒரு சம்பவம் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இந்த தேர்தல் களத்தை தனித்துவமாகியதில் முக்கிய பங்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் -க்கு உண்டு.
விஜய் கட்சி துவங்கிய இரண்டு ஆண்டுகளில் அவர் மீது வைக்கப்பட்ட மிகப்பெரும் விமர்சனங்களில் ஒன்று அவர் மக்களை சந்திக்கவில்லை என்பதுதான், ஆனால் கார்க்கும் ஒரு தேர்வாக மக்களை பார்க்க துவங்கியிருந்தார், கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 42-பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த விவகாரத்தை விசாரிக்க முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் அமைக்கப்பட்டது. அதோடு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது, இந்த விவகாரம் குறித்த பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
விஜயின் அரசியல் வாழ்வே கரூருக்கு முன் கருவூருக்கு பின் என்றாகி விட்டது. அந்த அளவுக்கு அந்த சம்பவம் பெரும் நெருக்கடியை கொடுத்துவிட்டது. ஆனால் இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், விஜய் -க்கு திரைத்துறையிலிருந்து நாளுக்கு நாள் எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே சரத் குமார், நெப்போலியன் உள்ளிட்ட நடிகர்கள் விஜயின் அரசியல் செயல்பாடுகள் குறித்து விமர்சித்திருந்த நிலையில், தற்போது நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸும் விஜயை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
“பாரதிய ஜனதா கட்சி கம்போஸ் செய்த பாடலுக்கு டான்ஸ் ஆடக்கூடிய நடிகர் (விஜய்) ஒருவர் கிடைத்துள்ளார். பனையூரில் பூட்டு உள்ளே போடப்பட்டு இருக்கா? இல்லை வெளியே போடப்பட்டு இருக்கா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்” என கலைக்கும் தொனியில் விமர்சித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் அதற்கு காரணமும் உண்டு தவெக -NDA (அதிமுக - பாஜக) கூட்டணி விரைவில் அமையவிருப்பதாகவும், அதற்கு விஜய்யும் ஒத்திசைவு கொடுத்திருப்பதாகவும் வெளியான தகவல்களால் தான் இப்படிப்பட்ட விமர்சனங்கள் எழுவதாகவும் கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.