ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை :
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் நிலைப்பாட்டை அறிவித்து வரும் நிலையில் சென்னை கோயம்பேடியில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதையும் படிக்க : தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை...!
தனித்துப்போட்டி :
இக்கூட்டத்தில் உட்கட்சித் தேர்தல், இடைத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். மேலும், ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளரான ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த நிலையில், தற்போது கூட்டணியில்லாமல் தனித்துப் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
மனப்பூர்வமதாக ஏற்றுகொள்வோம் :
தொடர்ந்து, தாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை என குறிப்பிட்ட பிரேமலதா, ஈபிஎஸ், ஓபிஎஸ், அண்ணாமலை, ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் தேமுதிகவுக்கு ஆதரவு அளித்தால் மனப்பூர்வமதாக ஏற்று கொள்வோம் என்றும் தெரிவித்தார்.