ராமர் கோவில் கட்ட கைப்பிடி மண் எடுக்க முற்பட்ட விவகாரம்; பா.ஜ.க.வினர் 50 பேர் கைது !

ராமர் கோவில் கட்ட கைப்பிடி மண் எடுக்க முற்பட்ட விவகாரம்; பா.ஜ.க.வினர் 50 பேர் கைது !
Published on
Updated on
1 min read

ராமர் கோவில் கட்ட கைப்பிடி மண் எடுக்க முற்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க. வினர் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒரு கை பிடி மண் சேகரிக்கும் பணியில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக பா.ஜ.க மாநில இளைஞரணி தலைவர் வினோஜ்.பி செல்வம் தலைமையில், இன்று காலை வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவிலில் இருந்து மண் எடுப்பதற்காக சென்றுள்ளனர். 

ஆனால், இந்த கோவிலில் மண் எடுப்பதற்கு இந்து அறநிலையத் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அனுமதி மறுப்பையும் மீறி கோவிலில் மண் எடுக்க சென்ற வினோத் பி செல்வம் உள்ளிட்ட பா.ஜ.க. வினர் 50 பேரை வில்லிவாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com