ஒரு கோடி அப்பு...! நீ பாத்த..? திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில்.... அயல்நாட்டு பணம்...!

ஒரு கோடி அப்பு...!   நீ பாத்த..?   திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில்....  அயல்நாட்டு பணம்...!
Published on
Updated on
1 min read

திருச்சி மாவட்டத்திலுள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக சுமார் ஒரு கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து காணிக்கைகளை செலுத்துவது வழக்கம். மேலும், சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாரியம்மனை தரிசனம் செய்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி, காணிக்கை உண்டியல்களில் காணிக்கையும் செலுத்தி விட்டு செல்கின்றனர்.

அவ்வாறு பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கை உண்டியல்களை கோவில் நிர்வாகம் மேற்பார்வையில் மாதம் இருமுறை  எண்ணப்பட்டு வருகிறது.  இன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை உண்டியல்களை கோவில் இணை ஆணையர் திருமதி.கல்யாணி தலைமையில் கோவில் வளாகத்தில் உள்ள கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் என 200க்கும் மேற்பட்டோர் காணிக்கை உண்டியல்களில் எண்ணும்  பணியில் ஈடுபட்டனர்.

இதில் ரூ 99 லட்சத்து 31 ஆயிரத்து 723 ரூபாய் ரொக்கம், 1 கிலோ 772 கிராம் தங்கம், 3 கிலோ 873 கிராம் வெள்ளி , அயல்நாட்டு நோட்டுகள் 230 ம், அயல்நாட்டு நாணயங்கள் 344 காணிக்கையாக பெறப்பட்டன என கோவில் இணை ஆணையர் திருமதி.கல்யாணி தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com