அயோத்திதாசப் பண்டிதரின் மணிமண்டபம் திறப்பு...!
சென்னையில் அயோத்திதாசப் பண்டிதரின் மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் 2 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அயோத்திதாசப் பண்டிதரின் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, அதனை பார்வையிட்டார்.
இதையும் படிக்க : ஐந்து மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியானது!
முன்னதாக காணொலியில் பேசிய அவர், தமிழ்நாட்டு அரசியலில் முதன்முதலாக தமிழன், திராவிடன் என்ற சொல்லை அடையாளப்படுத்தியவர் அயோத்தி தாச பண்டிதர் என்றார். அனைத்து தரப்பு மக்களும் சாதிமத பேதமின்றி வாழவேண்டும் என இறுதி வரை போராடியவர் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார் .
இந்நிகழ்ச்சியில் வீரமணி, வைகோ, திருமாவளவன் மற்றும் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.