தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை ..!

தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை ..!
Published on
Updated on
1 min read

சென்னை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். 

சென்னை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

வரி ஏய்ப்பு செய்வதாக புகார் வந்ததை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ், இன்டெர்லேஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ( CHENNAI RADHA ENGINEERING WORKS P(LTD), INTERLACE INDIA PRIVATE LIMITED ) என்ற தனியார் நிறுவனத்தில் இன்று காலை வருமானவரித்துறை அதிகாரிகள் சுமார் 8 மணி அளவில் சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

வெங்கடேசன் பிள்ளை என்பவருக்கு சொந்தமான இந்த நிறுவனத்தில் வரிஏய்ப்பு செய்ததாக புகார் வந்ததை தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் நான்கு பேர் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

 இதனையடுத்து,  அந்த பகுதியில் பரபரப்பன சூழல் நிலவியதால் பாதுகாப்புக்காக  துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com