
தமிழ்நாட்டில் புதிதாக 123 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 123 பேர் கொரோனா பாதிப்பு அடைந்து உள்ளனர். இதில் 66 ஆண்கள் மற்றும் 57 பெண்கள் அடங்குவார்கள். அதிகபட்சமாக சென்னையில் 35 பேருக்கும்,செங்கல்பட்டில் 13 பேருக்கும், சேலத்தில் 12 பேருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணி ஒருவர் உள்பட மொத்தம் 27 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 608 ஆக அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிக்க: புதிய தலைமை நீதிபதி நியமனம்...!!