சுதந்திர தின விழா: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!!

சுதந்திர தின விழா: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!!
Published on: 
Updated on: 
1 min read

ஆகஸ்ட் 15 நடைபெறவிருக்கும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடெங்கும் பிரமாண்டமான ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதற்காக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதன் காரணமாக அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச் சின்னம் வரையில் உள்ள சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதாவது, ஆகஸ்ட் 15தேதி, சுதந்திர தினத்தன்று, காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com