ராமேஸ்வரம் அருகே பறக்கும் ஹெலிகாப்டர்...அரசு எடுத்த அதிரடி முடிவு!

ராமேஸ்வரம் அருகே பறக்கும் ஹெலிகாப்டர்...அரசு எடுத்த அதிரடி முடிவு!
Published on
Updated on
2 min read

இந்திய அரசின் எதிர்ப்பை மீறி இலங்கை வந்தடைந்தது சீன கப்பல். இதனால்  ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்திடும் விதமாக ஐ.என்.எஸ் பருந்து விமானப் படைத்தளத்திற்கு சொந்தமான  ஹெலிகாப்டர் மூலம் கடற்கரை பகுதியில் ரோந்து  பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கண்காணிப்பு பணி தீவிரம்

தமிழ்நாடு- இலங்கை சர்வதேச கடல் எல்லைப் பகுதிக்கு ராமேஸ்வரம் மிக அருகாமையில் இருப்பதால் அந்நிய ஊடுருவல், போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களை தடுக்கும் விதமாகவும், அகதிகள் வருகை உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காக  இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகள் ராமேஸ்வரம் தீவு பகுதி சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

.என்.எஸ் பருந்து

இன்று உச்சிபுளியில் அமைந்துள்ள ஐ.என்.எஸ் பருந்து விமானப் படைத்தளத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மற்றும் ரோந்துக் கப்பல்கள் மூலம் ராமேஸ்வரம், அக்னி தீர்த்த கடற்கரை, மீன்பிடித் துறைமுகம் , தனுஷ்கோடி, அரிச்சல் முனை, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு ஒத்திகை

மேலும் ஹெலிகாப்டரில் இருந்து கடற்படை வீரர்கள் கயிறு மூலம் கடலில் இறங்கி தாழ்வாகப் பறந்து பாதுகாப்பு ஒத்திகையும் மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் கேட்கும் போது இந்தியாவின் எதிர்ப்பை  மீறி இலங்கை அம்பாந்தோட்டை கடற்பரப்பில் சீனாவின் விண்வெளி ஆய்வுக் கப்பல் வந்தடைந்து இருப்பது சம்பந்தமாக இந்த பாதுகாப்பு ஒத்தியை  நடைபெற்றுள்ளது. கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பில் இந்திய கடற்படை, கடலோர காவல் படை அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com