தொழில் வளர்ச்சி, சுற்றுச்சூழல் ஆகியவை ஒரே தராசின் இரு தட்டுகள் - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

தொழில் வளர்ச்சி, சுற்றுச்சூழல் ஆகியவை ஒரே தராசின் இரு தட்டுகள் - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

தொழில் வளர்ச்சி, சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் ஒரே தராசில் உள்ள இரு தட்டுகளைப் போல் தமிழக அரசு எண்ணுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Published on

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், வனத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மாநாட்டை துவக்கி வைத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், வனப்பரப்பை அதிகப்படுத்துவது, பசுமை சூழலை உருவாக்குவது வருங்கால தலைமுறைக்கு அத்தியாவசியம் என்றார். எதிர்க்கட்சியாக இருந்த போதும் சுற்றுச் சூழலை மனதில் வைத்துக்கொண்டு மரக்கன்றுகளை நட்டு வந்ததாகவும் கூறினார்.  பிளாஸ்டிக்கை ஒழிக்க மஞ்சள் பை இயக்கத்தை தொடங்கி வைத்ததாகவும் தெரிவித்தார். சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக, மாநாட்டில் பங்கேற்க தலைமை செயலகம் வந்த ஸ்டாலின், வளாகத்தில் மரக்கன்று நட்டார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com