அரசின் நடவடிக்கையால் சிமெண்ட் விலை குறைப்பு.. அமைச்சர் தங்கம் தென்னரசு...

அரசின் நடவடிக்கையால், சிமெண்ட் விலை 460 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். 
அரசின் நடவடிக்கையால் சிமெண்ட் விலை குறைப்பு.. அமைச்சர் தங்கம் தென்னரசு...
Published on
Updated on
1 min read
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய  தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை கடந்த ஆட்சி காலம் முதல் படிப்படியாக அதிகரித்து வந்ததாகவும், கடந்த மார்ச் மாதம் 420 ஆக இருந்த சிமெண்ட் விலை தற்போது 490 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.
விலையேற்றம் என தெரிந்தவுடன் பொதுமக்கள் பாதிப்படைய கூடாது என்பதற்காக முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி, சிமெண்ட மற்றும் கம்பி உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதன் அடிப்படையில் தற்போது 460 ரூபாயாக உள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com