மின்வாரிய ஊழியர்கள் ஆண்டுதோறும் 5 லட்ச ரூபாய் வரையிலும் காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும்அரியவகை நோய்களுக்கு ஆண்டுக்கு 10 லட்ச ரூபாய் வரை சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. காப்பீட்டுத் திட்டத்தில் இல்லாத மருத்துவமனைகளில் ஏதேனும் அவசரத்தின் அடிப்படையில் சிகிச்சை எடுத்துக்கொண்டாலும், அதற்கான தொகை பின்னர் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டம் பொருந்தாது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.