வாக்குச்சாவடிப் பொருட்களை மையங்களுக்கு அனுப்பும் பணி தீவிரம்..!

வாக்குச்சாவடிப் பொருட்களை மையங்களுக்கு அனுப்பும் பணி தீவிரம்..!
Published on
Updated on
1 min read

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்குச்சாவடியில் பயன்படுத்தும் பொருட்களை அனுப்ப, தேர்தல் அலுவலர்கள் தயாராகி வருகின்றனர்.


ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதற்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அனல் பறக்கும் பிரசாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று மாலை 5 மணியுடன் பரப்புரையும் முடிவடைகிறது. 

இதையடுத்து அனைத்து தேர்தல் பணிமனைகளையும் காலி செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

அதன்படி, வாக்குச்சாவடிகளில் அலுவலர்கள் பயன்படுத்தும் மை, விண்ணப்பப் படிவங்கள், வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட 84 பொருட்கள், வாக்குச்சாவடி முகவர்களுக்கு வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் முழுவதும் நிறைவுற்று, வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இப்பொருட்களையும் சேர்த்து அனுப்பப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com