``சாலை வரை வந்த கடல்நீர்.." 'அர்னாப் புயலின்' சீற்றம்.. 'சென்னையில்' போக்குவரத்து மாற்றம்.. எங்கே, எப்போது கரையைக் கடக்கிறது?

சென்னை பட்டினம் பாக்கம் கடற்கரையில் வழக்கத்திற்கு மாறாக கடல் அலைகள் சாலை அருகில் வரை வருகிறது இதனால் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாக்க சாலை அருகே நிறுத்தி வைத்துள்ளனர்.

Published on: 
Updated on: 
1 min read

'அர்னாப்' எனும் இந்த மிகத் தீவிர புயல் தற்போது நிலப்பகுதியுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ளது.பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே ஏனாம் அருகே புயல் முழுமையாகக் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

புயலின் நகர்வு வேகம் அதிகமாக இருப்பதால், அது முன்னதாகவே (அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள்) கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அர்னாப் புயலின் வெளிப்புறச் சுழல் வளையம் (outer spiral band) ஏற்கனவே நிலப்பகுதிக்குள் நுழைந்துவிட்டது. ஆந்திரா மட்டுமின்றி வட தமிழகக் கடலோரப் பகுதிகளும் தற்பொழுது கடும் சீற்றத்துடன் காணப்படுகின்றன. குறிப்பாக புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்வதால் சென்னை, திருவள்ளூர் மற்றும் எண்ணூர் கடற்பகுதிகளில் கடல் அலைகள் வழக்கத்திற்கு மாறாக சாலை வரை சீறிப்பாய்ந்து வருகின்றன.

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை எண்ணூர் கடற்கரை பகுதியில், அர்னாப் புயல் காரணமாக கடல் நீர் சாலையில் புகுந்து வழிந்தோடுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, ராமகிருஷ்ணா நகர் பகுதியில் இருந்து அன்னை சிவகாமி நகர் செல்லும் வாகனங்கள், எர்ணாவூர் பாலம், முருகர் கோவில் சாலை மற்றும் கத்திவாக்கம் கடற்கரை வழியாகத் திருப்பி விடப்படுகின்றன.

அதேபோல், தாழங்குப்பம் மற்றும் எண்ணூர் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் கத்திவாக்கம் பாலம் மற்றும் முருகர் கோவில் சாலை வழியாகச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன.

சென்னை பட்டினம் பாக்கம் கடற்கரையில் வழக்கத்திற்கு மாறாக கடல் அலைகள் சாலை அருகில் வரை வருகிறது இதனால் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாக்க சாலை அருகே நிறுத்தி வைத்துள்ளனர்.

கடல் அலைகள் ஆக்ரோசமாக வருவதைக் காண ஏராளமான பொதுமக்கள் கடற்கரைக்கு வந்துள்ளனர்.

``சாலை வரை வந்த கடல்நீர்.." 'அர்னாப் புயலின்' சீற்றம்.. 'சென்னையில்' போக்குவரத்து மாற்றம்.. எங்கே, எப்போது கரையைக் கடக்கிறது?
இந்தியாவை வாட்டப்போகும் ‘சூப்பர் எல் நினோ’! மழை குறையும் அபாயம், உணவுப் பொருட்களின் விலை உயருமா?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com