சர்வதேச புத்தக கண்காட்சி; 30-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்பு..!

சர்வதேச புத்தக கண்காட்சி; 30-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்பு..!
Published on: 
Updated on: 
1 min read

தமிழகத்தில் முதல் முறையாக நடைபெற்று வரும் சர்வதேச புத்தக கண்காட்சியை ஏராளமான பொது மக்கள் உற்சாகத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில், முதல் முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி திங்கட்கிழமை தொடங்கி 18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இஸ்ரேல், இத்தாலி, உகாண்டா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றுள்ள இந்த கண்காட்சிக்காக, 66 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பார்வையாளர்களுக்காக மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும், மற்ற இரண்டு நாட்களும் எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களுக்கு காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதி வழங்கப்பட உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com