“குழந்தைக்கு பால் கூட கிடைக்கல" சாதி மாறிய திருமணத்தால் ஊரை விட்டு ஒதுக்கிவைத்து மைக்கில் அறிவித்த கொடூரம்!!

“இப்போ எல்லாம் யாருங்க சாதி பார்குறா ..” என எளிதாக சொல்லிக் கொள்பவர்கள், சாதி பார்ப்பது ....
caste dicremination
caste dicremination
Published on
Updated on
2 min read

இந்தியா என்னதான் வளமான ஒரு நாடாகவும் உலக அளவில் வலிமையான ராணுவத்தை கொண்டிருந்தாலும், இந்தியாவின் மிகப்பெரிய இழுக்குகளில் ஒன்று சாதிய கொடுமை. ஒவ்வொரு நாட்டிலும் எளியோரை வலிமை படைத்தோர் நசுக்கி அவர்களின் உழைப்பை சுரண்டும் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்த ஏற்றத்தாழ்வை போக்கத்தான் ஜனநாயகம் அவசியம் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற போக்குதான் சரியானது. ஆனால் இந்தியா தன்னை ஜனநாயகமான ஒரு நாடக அறிவித்துக்கொண்டாலும் இந்தியா ஜனநாயக நாடு கிடையாது. சமூகத்தில் சமத்துவம் உருவாகாத நாடு தன்னை ஒருபோதும் ஜனநாயக நாடு என்று அழைத்துக்கொள்ள முடியாது. ஒருவேளை அப்படி ஒரு நாடு தன்னை அறிவித்துக்கொண்டால் அது மிகப்பெரும் ஒரு முரண்.

இந்தியா 77 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த முரணிலேயே தான் தொடர்ந்து வருகிறது. 77 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இன்னமும் மாறாமல் இருக்கக்கூடிய அவலம் பிறப்பால் உயர்வுதாழ்வு கருதுவது.

ஆனால் எல்லாவித ஏற்றத்தாழ்வுகளையும் உடைக்க கூடிய வல்லமை காதல் ஒன்றுக்குத்தான் இருக்கிறது, நிறம், மதம், இனம் மொழி என எந்த தடைகளும் அன்பு கொண்ட நெஞ்சத்திற்கு தெரியாது. ஆனால் அந்த காதலை கைக்கொள்ள முயலும் ஒவ்வொருவரும் சமூகத்தின் முன் குற்றவாளியாக்கப்படுகின்றனர் இல்லையெனில் கொல்லப்படுகின்றனர். எத்தனை விதமான ஆணவப்படுகொலைகளை நாம் பார்த்திருப்போம். பெற்றபிள்ளைகளை கொள்ளும் அளவிற்கு சாதி ஊறிப்போன ஒரு சமூகம்தான் இந்திய சமூகம்.

“இப்போ எல்லாம் யாருங்க சாதி பார்குறா ..” என எளிதாக சொல்லிக் கொள்பவர்கள், சாதி பார்ப்பது மட்டுமின்றி சாதியத்தின் மடைமைகளை கூட இன்னமும் வாசகத்தில் வைத்துள்ளனர், என்பதுதான் பெருங்கேடு. சாதி பார்ப்பதோடு மட்டுமின்றி சாதி மாறி திருமணம்

செய்த நபரை ஒற்றைவிட்டே ஒதுக்கி வைத்து அவர்களுக்கு அதவசிய பொருட்கள் வழங்ககூடதென ஒரு ஒரே முடிவெடுத்திருப்பது எத்தகு மோசமான ஒரு நிலை.

மரக்காணம் அருகேயுள்ள மண்டவாய்புதுக்குப்பம் கிராமத்தில் மாற்று சமூகத்தினரை திருமணம் செய்ததால் ஊர் பஞ்சாயத்தார் கிராமத்தை விட்டு தள்ளி வைத்து அத்தியாவசிய பொருட்களை வழங்க கூடாதென உத்தரவிட்டு உள்ளனர். பாதிக்கபட்ட பெண் விழுப்புரம் எஸ் பி அலுவலகத்தில் புகார் மனுவை அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள மண்டவாய்புதுக்குப்பம் கிராமத்தில் வசிக்கும் அங்கமுத்துவும் நாராயணபுரத்தை சார்ந்த தாமரைக்கண்ணன் ஆகிய இருவரும் பத்து வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர். அங்கமுத்து என்ற பெண் மீனவ சமூகத்தை சார்ந்தவர் அவரின் கணவர் தாமரைக்கண்ணன் வன்னியர் அங்கமுத்துவின் சமூகத்தை சார்ந்த ஊர் பஞ்சாயத்தார் சில வருடங்களாக மண்டவாய்புதுக்குப்பத்தில் இந்த தம்பதி வசிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் பஞ்சாயத்தார் மாறும் போதும் கிராமத்தை விட்டு வெளியேற பஞ்சாயத்தார் அவர்களை நிர்பந்தித்து வந்துள்ளனர். எதனால் ஏற்கனவே இந்த குடும்பம் பெரும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளது, இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன் அங்கமுத்து குடும்பத்தினரை ஊரை விட்டு வலுக்கட்டாயமாக ஒதுக்கி வைத்து கிராமத்தில் உள்ள கடைகளில் குடிநீர், பால் உள்ளிட்ட அத்திவாசிய பொருட்களை விற்பனையாளர்கள் வழங்க கூடாது என பஞ்சாயத்தார் உத்தரவிட்டுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட அங்கமுத்து மூன்று தினங்களாக குழந்தைகளுக்கு பால் வாங்கவும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்று வாங்கி வந்துள்ளனர். மீண்டும் மீண்டும் பஞ்சாயத்தார் ஊரை விட்டு வெளியேற கூறுவதால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க இன்று விழுப்புரம் எஸ் பி அலுவலகத்தில் தன் குடும்பத்தாரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதால் பஞ்சாயரம்த்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தார்.

இந்த புகாரை தொடர்ந்து மாவட்ட எஸ் பி சரவணன் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின் பேரில் மரக்காணம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கபடுமென மரக்காணம் காவல் ஆய்வாளர் பரணி தெரிவித்துள்ளார். மேலும் கிராம பஞ்சாயத்தில் 9 பேர் கொண்ட நாட்டாமையாக உள்ள பாலு, ராஜா, சங்கர்,தங்கராஜ், ராஜ்குமார், ஜெகன், சத்தியமூர்த்தி,கனகராஜ் ஆகியோர் கோவில் மைக் செட் மூலமாக கிராமத்தை விட்டு தள்ளி வைத்ததாக ஒலிக்க செய்தததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இது எத்தகு கேவலமான ஒரு இழிச்செயல். குழந்தைகளுக்கு பால் கூட தர மறுக்கும் ஒரு சாதிய கறைபடிந்த நாடு எப்படி தன் பாரம்பரியங்களை பெருமையுடன் நினைத்து பார்க்க முடியும். நாம் எளிதாக கூறிவிட முடியும் அவர்கள் வேறு ஊருக்கு சென்று வாழலாமே என்று, தான் சொந்த ஊரைவிட்டு செல்லும் அளவுக்கு அவர்கள் அப்படி என்ன பெரும் குற்றம் செய்தார்கள் என்பதுதான் இப்போது கேள்வி. மேலும் ஒரு குடும்பத்திற்கு அத்யாவசிய பொருட்கள் ஏதும் தராமல் அவர்களை ஊரைவிட்டே ஒதுக்குவதற்கு பஞ்சாயத்து காரர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்பதும் மிகப்பெரிய கேள்வி.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com