“கண்மாயை காணோம்ங்க..! ” இல்லாத கண்மாய்க்கு ரூ. 32 லட்சத்துக்கு பராமரிப்பா? வடிவேலு பட பாணியில் நடந்த ஆக்கிரமிப்பு..!

மத்திய அரசின் திட்டமான அம்ரித் சரோவர் எனும் திட்டத்தின் கீழ் பணி செய்து கண்மாயை தூர்வாரியதாக கூறி 32 லட்சம் செலவழித்ததற்க்கான கல்வெட்டும் வைக்கப்பட்டுள்ளது.
irrigation tank missing in madurai
irrigation tank missing in madurai
Published on
Updated on
1 min read

திரைப்படம் ஒன்றில்  “வெட்டாத கிணற்றைக் காணோம்” என வடிவேலு புகார் அளிப்பது போல் பாலமேடு அருகே ஆக்கிரமிப்பால் ஒரு கண்மாயே காணாமல் போய் உள்ளது.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே அலங்காநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாணிக்கம்பட்டி ஊராட்சியில் பொம்மிநாயக்கம்பட்டி என்ற கிராமம் உள்ளது.

இக்கிராமத்தில்தான்  சுமார் பத்து ஏக்கர் பரப்பளவு கொண்ட தம்பிநாயக்கன் கம்மாய் உள்ளது.  இந்த கண்மாய்க்கு செல்லும் வழித்தடம் முழுவதும் ஆக்கிரமிப்பு உள்ளதாகவும் இதற்கு நீர் வழி ஆதாரமாக உள்ள ஓடை முழுவதும் தனி நபர் ஆக்கிரமிப்பு இருப்பதாகவும்,  தற்போது அந்த கண்மாயையும்  தனிநபர் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதாகவும் அவ்வப்போது இப்பகுதியில் கிராவல் மண் திருட்டு நடப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் மஎவ்வித நடவடிக்கையும்  எடுக்கவில்லை என பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும் இந்தக் கண்மாயில் மத்திய அரசின்  திட்டமான  அம்ரித் சரோவர் எனும் திட்டத்தின் கீழ் பணி செய்து கண்மாயை தூர்வாரியதாக கூறி 32 லட்சம் செலவழித்ததற்க்கான கல்வெட்டும் வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கல்வெட்டானது கிராம மக்களுக்கு புரியாதது போல் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டுள்ளது. நடைபெறாத பணிக்கு 32 லட்சம் செலவு செய்து தூர்வாரப்பட்ட கண்மாயையும் தற்போது காணவில்லை.  

நமது செய்தியாளர்கள் இது குறித்து பொதுமக்களோடு பேசியபோது காணாமல் போன கண்மாய்க்கு 32 லட்சம் செலவா? என அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

மேலும் இப்பகுதியில்  விவசாயத்திற்கும் ஆடு மாடு குடிப்பதற்கும் நீர் ஆதாரமாக உள்ள இந்த கன்மாயில்உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் மேலும் செய்யாத வேலைக்கு 32 லட்சம் ரூபாய் செலவு செய்ததாக கணக்கு காட்டிய நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படியும்  இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com