பலம் பெறுகிறாரா அன்புமணி? பெருகும் நிர்வாகிகளின் ஆதரவு..! “குமுறும் கவுரவத்தலைவர்” - என்ன செய்வார் ராமதாஸ்?

"தொண்டர்கள் இல்லாமல் பாமக இல்லை. இது மக்களின் கட்சி தனிப்பட்ட நபரின் சொத்து இல்லை..."
anbumani ramadoss
anbumani ramadoss
Published on
Updated on
3 min read

கடந்த  சில மாதங்களாகவே பாமக -விற்குள் தந்தை மகன் கோஷ்டி மோதல் வலுத்து வருகிறது. இளைஞர் அணி தலைவரகாக் ராமதாஸின் பேரன் முகுந்தன் நியமனத்தை எதிர்த்து அன்புமணியோடு தொடர்ந்து ராமதாஸ் சண்டையிட்டு வந்தார். இந்த பூசல் சமையங்களில் வெளிப்படையாகவே நடந்ததது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தைலாபுரத்தில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பாமக நிர்வாகிகள் 20-பேர் மட்டுமே கலந்துகொண்டனர். இந்த விவகாரம் பெரும்பான்மையான கட்சித்தொண்டர்கள் அன்புமணியின் வசம் இருப்பதையே காண்பித்தது.

சில தினங்களுக்கு முன்னர் திண்டிவனம்  அடுத்த தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றார்.அப்போது பேசிய ராமதாஸ் “கடந்த சில தினங்களுக்கு முன்பாக தர்மபுரியில் பேசிய டாக்டர் அன்புமணி ராமதாஸ் நான் என்ன தவறு செய்தேன்? என்று கேட்டிருந்தார் அதற்கான பதிலை நான் சொல்ல வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது எனது சக்தியை மீறி 35 வயதில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களை மத்திய மந்திரி ஆக  ஆக்கியது எனது முதல் தவறு” என பேசினார்.

மேலும் பேசிய அவர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி பதவியேற்ப பின் போது , நான் இந்த கட்சியை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அன்புமணி ராமதாஸ் என்னிடம் கேட்டார்.நடந்து முடிந்த தேர்தலில அதிமுகவுடன் கூட்டணி வைக்கவும், எடப்பாடி பழனிசாமியிடம் அன்புமணி பேசியதன் அடிப்படையில் சிவி சண்முகத்திடமும் பேசப்பட்டது. ஆனால் பிஜேபியிடம் கூட்டணி வைக்க நிர்பந்தம் செய்தார். அன்புமணியும் அவரது மனைவியும் என்னிடம் அழுதார்கள்.அப்பொழுது இந்தக் கூட்டணியை நீங்கள் ஏற்றுக்  கொள்ளவில்லையென்றால் நான் இறந்துவிடுவேன் என்று அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

பலத்தை காட்டிய அன்புமணி 

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இரண்டாவது நாளாக மாவட்ட நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார், இதில் 22 மாவட்ட நிர்வாகிகள் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.உட்கட்சி விவகாரம், தேர்தலில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிப்பார் எனத்தெரிகிறது.

அன்புமணியின் சூசகம் 

தொடந்து கூட்டத்தில் பேசிய அன்புமணி,” நமக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றது. அனைவரோடும் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். மேல்-கீழ் என்ற பாகுபாடு இங்கு கிடையாது. மேலும் பாமக பொதுக்குழுவாள் தேர்வு செய்யப்பட்ட தலைவன் நான். தொண்டர்கள்  இல்லாமல் பாமக இல்லை. இது மக்களின் கட்சி தனிப்பட்ட நபரின் சொத்து இல்லை. அனைவரும் புதிய உறுப்பினர்களை கட்சியில் சேருங்கள், 16 வயது இளைஞர்கர்கள் 2029- தேர்தலை மனதில் வைத்து கட்சியில் சேருங்கள். மேலும் என்றும் நமது முன்னோடி “ஐயா ராமதாஸ் நம்முடைய குலசாமி, குலதெய்வம், கொள்கை வழிகாட்டி” அவரின் சிந்தனைகளை கருத்தில் கொண்டு நாம் எதிர்க்களத்தில் செயல்படுவோம்" என பேசியிருந்தார்.

ஒரே மேடையில் திலகபாமா - வடிவேல் ராவணன் 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காலையில்  தருமபுரி, கள்ளக் குறிச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்தவர்களும் மாலையில் அரியலூர்,பெரம்பலூர் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் தஞ்சாவூர்,திருவாரூர்,திருச்சி உட்பட மொத்தம் 12 மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.

குறிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வியூகம் , கூட்டணி குறித்தும்,மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்வது குறித்தும் நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மொத்தம் 16 மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது அதில் 15 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில்  நேற்றைய தினம் நடைபெற்ற அன்புமணி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் கலந்துகொண்டு ஆதரவு வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் இரண்டாம் நாளான இன்றைய ஆலோசனை கூட்டத்திற்கு முன்னதாக தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் மற்றும் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகியோர் அன்புமணி ராமதாசை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பாமக நிறுவனரின் ஆதரவாளராக இருந்த கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தற்போது நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

அதே நேரத்தில் பாமக பொருளாளர் திலகபாமா மீது கடுமையான விமர்சனங்களை வைத்த வடிவேல் இராவணன் ஆகிய இருவரும் ஒரே மேடையில் கலந்து கொண்டுள்ளனர்.

தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் கூட்டத்தை புறக்கணித்துள்ளார்

அப்போதே செத்துவிட்டேன் 

நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் “நன் 108 மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால் 8-பேர் மட்டுமே வந்தனர். அப்போதே நான் செத்துவிட்டேன்” எனக்கூறியிருந்தார்.

பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேட்டி...

இந்த உட்கட்சி மோதல் குறித்து செய்தியாளர்களை சந்தித்த பாமக கவுரவ தலைவர் ஜி.கே மணி “இது உட்கட்சி பிரச்சனை.. இது குறித்து கருத்து தெரிவிக்கும் சூழ்நிலையில் நாங்கள் இல்லை. நான் கட்சிக்கும், ராமதாசுக்கும், அன்புமணிக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். கட்சிக்காகவும், மக்கள் பிரச்சனைக்காகவும் உழைத்தவன் நான். ஆனால் என்னை பற்றி அவதூறான கருத்துக்களை சிலர் பரப்பி வருகிறார்கள். டாக்டர்.ராமதாஸ் , அன்புமணிக்கு இடையே சுமூகமான நிலை ஏற்பட்டு சீக்கிரமாக முடிவுக்கு வர வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசை. என் மீது குற்றச்சாட்டு சுமத்துவர்கள் மீது நான் எந்த குற்றச்சாட்டையும் கூற விரும்பவில்லை. நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். ஒன்று நான் யார் தொடர்பிலும் இல்லாமல் ஊரை விட்டே சென்று விட வேண்டும் அல்லது உயிரை துறப்பது! இது தான் வழி என நினைக்கிறேன்” என பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com