சம்பள பாக்கியை கேட்டது குற்றமா!?? டிரைவரை அடித்தே கொன்ற கொடூரம்!

மூவரையும் தாக்கிய வாகன உரிமையாளர் மாரிமுத்து மற்றும் அவரது மகன் நடராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்ய ...
young men death
young men death
Published on
Updated on
1 min read

சம்பள பாக்கியை கேட்ட மாற்றுத்திறனாளியின் மகனை  வாகன உரிமையாளர் அடித்ததில் உயிரிழப்பு .

பொள்ளாச்சி அடுத்த ரங்கசமத்தூர் பகுதியில் வசித்து வரும் பார்வை மாற்று திறனாளிகள் ஐயம்மாள் மற்றும் ரங்கராஜ் தம்பதிக்கு பிரதீப்குமார் என்ற மகன் உள்ளார்.பிரதீப்குமார் இரு நண்பர்கள் வஞ்சியபுரம் பகுதியைச் சார்ந்த அர்ஜுன் ஜோதி நகர் பகுதியைச் சார்ந்த கார்த்தி மூவரும் வாகன உரிமையாளர் மாரிமுத்து என்பவரிடன் வாகனம் ஓட்டும் வேலையை செய்து வந்ததாக தெரிகிறது. 

ஜோதி நகர் பகுதியைச் சார்ந்த அர்ஜுனன் சம்பள பணம் கேட்க கடந்த 8-ஆகஸ்ட்-2025 வெள்ளிக்கிழமை மூவரும் சுமார் மாலை 8.00 மணி அளவில் சென்றதாக தெரிகிறது. மாரிமுத்து மற்றும் அவரது மகன் நடராஜ் இருவரும் குடி போதையில் பிரதீப் குமார் அர்ஜுனன் கார்த்திக் மூவரையும்  கம்பி மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

பிரதீப்குமார் தலையில் பலமாக தாக்கியதில் மயங்கி விழுந்த அவரை அங்கிருந்த பொது மக்கள் 108 அழைத்து கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அடிதடி வழக்கு பதிவு செய்த கோட்டுர் காவல் நிலைய போலீசார்,கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதீப் குமார் மூளை  சிதைவு ஏற்பட்டு  ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி அறுவை சிகிச்சை முடித்து சிகிச்சை  பெற்று வந்த பிரதீப் குமார் சிகிச்சை பலனின்றி உறுப்புகள்  செயலிழந்து உயிரிழந்தார். மூவரையும் தாக்கிய வாகன உரிமையாளர் மாரிமுத்து மற்றும் அவரது மகன் நடராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரியும் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளான பெற்றோர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com