
2026 -ஆவது சட்டமன்ற தேர்தல் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே சொல்லலாம். இந்த தேர்தல் களத்தில் புது வரவு என்றால் அது ‘தமிழக வெற்றி கழகம்’ தான். விஜய்யின் அரசியல் பிரவேசம், ஆதவ் அர்ஜுனா பிரஷாந்த் கிஷோர் ஆகியோரின் பங்களிப்பு என தமிழக வெற்றி கழகம் நல்ல ஒரு பப்ளிசிட்டி யோடே களம் காண உள்ளது.
சின்ன ரீவைண்ட்..!
விஜய் அரசியலில் குதிப்பார் என்று நினைத்தது இன்று நேற்றல்ல 2013 ஆம் ஆண்டு தலைவா படம் வெளியாகி “time to lead” என கேப்ஷன் வைத்து அதற்காக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை கடுப்பேற்றி மன்னிப்பு கேட்ட விவகாரமெல்லாம் அவரின் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தின. ஆனால் அவரோ “ஓடு மீன் ஓட உறுமீன் வருமென” காத்திருந்த கொக்குபோல காத்திருந்து அரசியலில் குதித்துள்ளார்.
அரசியல் எதிரியாக திமுக -வையும் கொள்கை எதிரியாக பாஜகவையும் முன்னிருத்தி தன் அரசியல் பயணத்தை துவங்கியுள்ளார்.
அடுத்தடுத்து எழும் விமர்சனங்கள்!
அவரது அரசியல் பிரவேசம் உண்மையில் தமிழகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது. விஜய் ‘work from home’ அரசியல் செய்கிறார், என பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தது. சமீபத்தில் நடந்த அஜித் குமார் லாக் அப் மணரத்தில் விஜய் எடுத்து முன்னெடுப்புகள் மிகவும் கவனிக்கப்பட்டது. நேரடியாகவே பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பொய் ஆறுதல் சொன்னார். கட்சி சார்பிலும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு இடையில்தான் கடந்த ஜூலை 20 -ஆம் தேதி கவின் என்ற ஐ.டி ஊழியர் சுர்ஜித் என்ற இளைஞனால் வெட்டி ஆவணப்படுகொலை செய்யப்பட்டார்.
கவினும் சுர்ஜித் சகோதரியும் காதலித்து வந்துள்ளனர். தனது சகோதரி வேறு ஒரு சமூகத்தை சேர்ந்த ஆணை காதலிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத சாதிவெறி பிடித்த சுர்ஜித் கவினின் முகத்தில் மிளகாய் பொடி தூவி வெட்டிக்கொன்றுள்ளர்.
இந்த சம்பவம் மாநிலத்தையேஉலுக்கியது. ஆளும் கட்சியான திமுக -மீதும் எதிர்ப்புகள் வலுத்தது, அதற்கு காரணம் சுர்ஜித் -ன் பெற்றோர் இருவருமே காவலர்கள் இந்த கொலை தொடர்பாக அவர்கள் இருவரும் கைது செய்யப்படாமல் இருந்தனர். பலகட்ட அழுத்தத்திற்கு பிறகு சுர்ஜித் தந்தை மட்டும் கைது செய்யப்பட்டார், ஆனால் அவரின் தாய் இன்னமும் தலைமறைவாகவே உள்ளார்.
5 நாள் போராட்டத்திற்கு பிறகு உடலை பெற்றுக்கொண்ட பெற்றோர், மகனை பார்த்து கதறி அழும் காட்சிகள் கண்ணை கலங்க வைத்தன.
இந்த கோர சம்பவத்தை எதிர்த்து மாநிலம் முழுக்க போராட்டமும், எதிர்ப்புகளும் வலுத்தது. இன்னும் இறங்கி வந்து சொல்ல வேண்டுமென்றால், வருகிற தேர்தலில் போட்டியிட விரும்பும் அனைத்து கட்சிகளும் தங்கள் தரப்பு அரசியலை செய்யவாவது போராட்டத்தை நடத்தினர். ஆனால் அம்பேத்காரையும், பெரியாரையும் தனது கொள்கை வழிகாட்டிகள் என சொல்லிக்கொள்ளும் விஜய் கவினின் சாதிய ஆணவப்படுகொலைக்கு ஒரு துண்டு அறிக்கை கூட விடவில்லை என்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் தமிழகத்தில் அவரை அரசியல் ரீதியாகவும் தலைவனாக ஏற்றுகொண்ட பலபேர் சிறுபான்மையினர், தலித் சமூகத்தினர் தான். வெறும் ஓட்டுக்காக மட்டுமே அம்பேத்கர் புகைப்படத்தை வைத்து அரசியல் செய்கிறாரா விஜய் என பல கேள்விகள் எழுந்தன. பரந்தூர், அண்ணா பல்கலை விவகாரம், டாஸ்மார்க் ஊழல், என அனைத்திலும் தமிழக வெற்றிக்கழகம் முழு வீச்சில் செயல்பட்டது. அஜித் குமார் என பெயர் இருந்தால் ஓட எங்கள் தலைவர் குரல் கொடுப்பார் என ஒரு முதிர்ச்சியை இல்லாமல் சிறுபிள்ளை தனமாக தவெக கொ.ப.செ பேசியிருந்தார். இதெற்க்கெல்லாம் வெகுண்டெழுந்த விஜய் ‘ஆணவப்படுகொலைக்கு’ மவுனம் காத்ததில் உள்நோக்கம் இருப்பதாய் விமர்சனங்கள் எழுகின்றன.மேலும் சாதிய ஒழிப்பை பேசி கட்சி துவங்கிவிட்டு, சாதிய ஆணவப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்காமல் இருப்பதே பெரும் அபத்தம்.
மேலும் கள அரசியலை விஜய் எவ்வாறு புரிந்துகொண்டிருக்கிறார் என தெரியவில்லை. நேரடியாக மக்களோடு சென்று இருப்பது, அவர்களின் வாழ்வியலை புரிந்துகொண்டு, வலியை புரிந்துகொண்டு அதற்கேற்றார் போல தான் அவர்களுக்கு உதவி செய்ய முடியும். இவர் அனைத்தையுமே பனையூரிலேயே செய்வர் என்றால், அரசியல் அப்படி இயங்காது. மக்களுக்கு பணியாற்ற தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் விஜய் வீணடித்துவிட்டார். எல்லா சமூக பிரச்சனைகளையும் அடுத்து வருகிற மாநாட்டிற்க்கு பேச சேர்த்து வைத்திருப்பர் போல…
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.