பற்ற வைத்த இ.பி.எஸ்...! திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா காங்கிரஸ்? - விஜய் பக்கம் வீசும் காற்று!

திமுக -விற்கும் காங்கிரசிற்கு சண்டை முற்றிவிட்டது. நெல்லையில் இன்று ஒரு காங்கிரஸ் கூட்டம் நடந்தது. அதில் ..
vijay - selvaperunthagai
vijay - selvaperunthagai
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதுவரை நாம் யாரும் பார்க்காத மாபெரும் தேர்தலாக இது அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தற்போது வரை களத்தில் நான்கு முனை போட்டி தான் நிலவுகிறது. 

இன்றைய அரசியல் களத்தில் புது வரவு என்றால் அது விஜய் -ன் தமிழக வெற்றி கழகம் தான். தவெக இதுவரை  2 அரசியல் மாநாடுகளை  வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. தற்போது வரை இரண்டு கட்ட மக்கள் சந்திப்புகளை நடத்தியுள்ளார். அதிலும் கடந்த சனிக்கிழமை அவர் நாகப்பட்டினம், திருவாரூரில் பரப்புரை செய்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அவர் தொடர்ந்து மக்களை சந்திக்க இருக்கிறார்.

ஆனால், அவரின் இந்த அரசியல் பிரவேசம் திமுக உட்பட பல கட்சிகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. 

இந்த விஜய் Factor -கூட்டணி கட்சிகள் திமுக -உடன் பேரம் பேசுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம்.

திமுக கூட்டணியின் பிளவு 

திமுக -வில் உட்கட்சி பூசல்கள் இருந்தாலும் அவை இன்னும் பொது வெளிச்சத்திற்கு வந்து பேசு பொருள் ஆகாமல் இருந்தது. ஆனால் தற்போது அந்த பிம்பமும் உடைந்துள்ளது. திமுக -விலிருந்து முதலில் வெளியேறக்கூடிய கட்சியாக காங்கிரஸ் தான் இருக்கும் என சொல்லப்படுகிறது.

நேற்று பரப்புரையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி “திமுக -வின் கூடாரம் காலியாகப்போகிறது’ எனப் பேசியிருந்தார். தொடர்ந்து பேசிய அவர்,  “திமுக -விற்கும் காங்கிரசிற்கு சண்டை முற்றிவிட்டது. நெல்லையில் இன்று ஒரு காங்கிரஸ் கூட்டம் நடந்தது. அதில் திமுக -விடம் 117 தொகுதிகளை கேட்போம் என காங்கிரசின் மேலிட பொறுப்பாளர் பேசியுள்ளார். மேலும் ஆட்சியில் பங்கு வேண்டும் எனவும் பேசியுள்ளார்.மேலும் காங்கிரசின் முன்னாள் தலைவர் கே.எஸ் அழகிரியும், “ஆட்சியில் நிச்சயம் பங்கு வேண்டும்.  60 ஆண்டுகளாக ஒரு கட்சியோடு கூட்டணி வைத்துவிட்டு சாறையெல்லாம் உறிந்துவிட்டு,  வெறும் சக்கையைத்தான் காங்கிரஸ் கட்சி பார்க்கிறது’ என பேசியுள்ளார். ஆகவே மக்களின் இன்னும் சில நாட்களில் திமுக கூட்டணி காலியாக உள்ளது” என எடப்பாடி பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்வப்பெருந்தகை பேச்சு..!

நேற்று விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகையிடம்,  தேர்தல் களம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “கூட்டணியில் காங்கிரஸுக்கு கூடுதல் சீட்கள் வேண்டும் என்று கட்சியினர் தங்களுடைய ஆசையை சொல்கிறார்கள். இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தாது. ஆனால், முடிவு எடுப்பது காங்கிரஸ் தலைமையும், பொறுப்பாளர்களும் தான்” பேசியிருந்தார்.

தொடர்ந்து அவரிடம், விஜய் அதிமுக -வையும் காங்கிரஸ் -ஐயும் பெரிதாக விமர்சிக்கவில்லையே என கேள்வி எழுப்பப்பட்டது,

“தமிழகத்திலும், மத்தியிலும் காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியாக இல்லை. எங்களை விமர்சிக்க ஒன்றும் இல்லாததால், தவெக தலைவர் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை. விஜய் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் அவர் என்ன பேசுகிறார் என தெரியும். விஜய் கட்சிக்கு கூட்டம் நடத்த பிரச்சாரம் செய்ய அரசு அனுமதி தர மறுப்பதாக கூறுகிறீர்கள். காங்கிரஸ் கட்சிக்கு மட்டும், அரசு உடனே அனுமதி தருகிறதா?

ஒவ்வொரு போராட்டத்துக்கும் போராடிதான் அனுமதி வாங்க வேண்டியதாக இருக்கிறது. இந்த நான்கரை ஆண்டுகளில், போராட்டம் நடத்தியபோது, என்னை கைது செய்து உள்ளார்கள். அதற்காக நாங்கள் ‘காவல் துறை கைது செய்து விட்டது. அரசு நெருக்கடி தருகிறது’ என்று சொல்ல முடியுமா? அவர்கள் வேலையை, அவர்கள் செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சி எப்போதும், ஜனநாயகத்தின் பக்கம் தான் இருக்கும்” என்றார் செல்வப்பெருந்தகை.

அரசியல் களம் நாளுக்கு நாள் புதிய பரிணாமங்களை எடுத்துள்ளது. உண்மையில் விஜய் திமுக -விற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்தான். விஜய் factor என்ற ஒன்று உருவாகாமல் போயிருந்தால், கூட்டணி கட்சிகள் திமுக எத்தனை இடங்களை ஒதுக்குகிறதோ, அத்தனை இடங்களை மட்டுமே பெற்றிருக்கும். இன்று அவர்கள் விஜய் முன்னிறுத்தி அதிக சீட்டுகள் நிச்சயம் கோருவர். அதனால்தான் திமுக விஜய் -க்கு இத்தகு நெருக்கடியை கொடுக்கிறது, என அரசியல் கட்சிகள் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து  வருகின்றனர்.  

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com