
நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
உயர்ரத்த அழுத்தம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பு தான் நடிகர் விவேக் மரணமடைந்தார் எனவும் ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட நடிகர் விவேக் ஏப்ரல் 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
முன்னதாக விவேக் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்திருந்த நிலையில் அது தொடர்பான விசாரணையில் இந்த அறிக்கையை தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு வெளியிட்டுள்ளது.