“I am an illegal CM.. பதவி விலகுவாரா முதல்வர்?" - SIR விவகாரத்தில் முதல்வரையும், ராகுல்காந்தியையும் அட்டாக் செய்யும் நயினார்!

ஜோசப் விஜய் SIR - க்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பது, மிகப்பெரிய அரசியல் பிழை. மண் குதிரையை நம்பி யாராவது நட்டாற்றில் இறங்குவார்களா?
Vijay SIR controversy
Vijay SIR controversy
Published on: 
Updated on: 
2 min read

இன்று (அக் 15) சென்னை எழும்பூரில் இந்தியா கூட்டணி சார்பில் தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முதல் முறையாக கூட்டணியில் இருக்கும் தவெக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது. மேலும், ஆர்ப்பாட்டத்தில் தவெக சார்பில் அமைச்சர் ராஜ் மோகன் கலந்துகொண்டார். இந்த நிலையில், SIR-க்கு எதிராக தவெக ஆர்ப்பாட்டக்களத்தில் இருந்த நிலையில் அதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது கண்டனத்தை அவரது அதிகாரப்பூர்வ X தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், "SIR - க்கு எதிராக போர்க்கொடி பிடிக்கிறதா தவெக அரசு?. கூட்டணி விசுவாசத்திற்காக இந்திய அரசியலமைப்பை எதிர்க்க துணிந்துவிட்டாரா முதல்வர் திரு. ஜோசப் விஜய்?

அனைத்து மக்களின் வாக்குரிமையை பாதுகாக்கும் வகையில், போலி வாக்காளர்களை கண்டறிதல், வாக்காளர் கணக்கெடுப்பு, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு உட்பட பல செயல்முறைகளை முன்னெடுத்து வரும் SIR- க்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றுள்ள தவெக-விற்கு எனது கடும் கண்டனங்கள்.

பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி, கிராமசபை என நாடு முழுவதிலும் நடக்கும் அனைத்து தேர்தல்களிலும் படு தோல்வியை சந்தித்து வரும் இந்திய தேசிய காங்கிரஸ், தங்கள் கையாலாகாத்தனத்தை மறைக்க தேர்தல் ஆணையத்தின் மீதும், SIR மீதும், EVM இயந்திரங்கள் மீதும் பழி போட்டு வருகிறது. "வாக்கு திருட்டு" நடந்ததற்கான ஆதாரங்களைக் கேட்டால், "ஆடு திருடு போகவில்லை, திருடு போன மாதிரி கனவு கண்டேன்" என்ற நகைச்சுவை வசனம் போல, "No Evidences but I have a feeling" என்று மழுப்புகிறார் திரு. ராகுல்காந்தி அவர்கள்.

இப்படிப்பட்டவர்களுடன் இணைந்து கொண்டு, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களும் SIR - க்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பது, மிகப்பெரிய அரசியல் பிழை. மண் குதிரையை நம்பி யாராவது நட்டாற்றில் இறங்குவார்களா?

மேலும், கேரளாவைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திரு. ரமேஷ் சென்னிதலா, SIR - யை வரவேற்றுள்ளார்.

SIR - க்குப் பிறகு, கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது, தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்தது, அரை நூற்றாண்டுக்கு பிறகு காங்கிரஸுக்கு தமிழக அமைச்சரவையில் இடமும் கிடைத்தது.

அதுமட்டுமன்றி, SIR மூலமாக, நிரந்தரமாக இடம்பெயர்ந்த வாக்காளர்கள், இறந்த வாக்காளர்கள், இரட்டை வாக்குரிமை கொண்டவர்கள் உட்பட சுமார் 13 கோடி பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அப்படியென்றால், இறந்த வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைத் தக்க வைத்துக்கொண்டு தனக்கு வாக்களிக்க வேண்டும் என திரு.ராகுல் காந்தி அவர்கள் விரும்புகிறாரா? முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் அதை ஆமோதிக்கிறாரா?

மேலும், SIR- க்கு பிறகு பதவிக்கு வந்தவர்கள் "Illegal Occupants" என்ற pகாங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்களின் கருத்தை தவெக ஏற்றுக்கொள்கிறதா? "I am an illegal CM" என்பதை ஒப்புக்கொண்டு திரு. ஜோசப் விஜய் அவர்கள் பதவி விலகத் தயாரா?" என்று காட்டமாக தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com