"திமுக அமைச்சர்கள் வீடுகளில் ஈடி சோதனை நடைபெறுவது ஒன்றும் அதிசயமில்லை " - மத்திய அமைச்சர் எல். முருகன்

"திமுக அமைச்சர்கள் வீடுகளில் ஈடி சோதனை நடைபெறுவது ஒன்றும் அதிசயமில்லை " - மத்திய அமைச்சர் எல். முருகன்
Published on
Updated on
1 min read

திமுக அமைச்சர்கள் வீடுகளில் ஈடி சோதனை நடைபெறுவது ஒன்றும் அதிசயமில்லை என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் கால்நடைத் துறை இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். 

நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று மத்திய அமைச்சர் எல்.முருகனின் முகாம் அலுவலகம் திறக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்திலுள்ள மக்கள் நேரடியாக தங்கள் குறைகளை தெரிவிக்கும் அலுவலக முகாமாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த முகாம் திறப்பு விழாவில் கணபதி ஹோமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன்:-

”திமுக அமைச்சர்கள் வீடுகளில் ஈடி சோதனை மேற்கொள்வது ஒன்றும் அதிசயமில்லை” எனவும், திமுக என்றாலே ஊழல் தான்” என்று தெரிவித்தார். 

நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் இடங்களில் ஈடி சோதனை மேற்கொள்வது குறித்து கேட்டதற்கு,

“ராசா ஒரு மிகப்பெரிய ஊழல்வாதி;  1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழலில் 2ஜி ஊழல்,.. அதனை தொடர்ந்து தான் கோவையில் 55 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கி ஈடி சோதனை நடைபெற்று வருகிறது. 

மக்கள் இதுபோன்ற அரசியல்வாதிகளை வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள், ஊழல்வாதிகளிடமிருந்து தூரமாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது”,  என்றார்.

அதிமுக கூட்டணி கேட்ட போது:-

தலைமை முடிவு எடுக்கும் என்றார். மேலும் பேசிய அவர், தமிழகத்தில் 9 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்றும், நாடு முழுவதும் 165 தொகுதி பாஜக வெற்றி பெறும் தொகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மத்திய அமைச்சர் எல்.முருகன் அலுவலக திறப்பு விழாவின் போது பூ மாலையை வெட்ட கத்திரிக்கோல் கொண்டு வர காலதாமதமான நிலையில் கடுப்பான எல்.முருகன் தனது கைகலாலேயே பிய்த்து அலுவலகத்தை திறந்தது அங்கிருந்த பாஜக தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com