குழந்தைகள் தந்தையிடம் இருப்பது குறித்து கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...!

குழந்தைகள் தந்தையிடம் இருப்பது குறித்து கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...!
Published on
Updated on
1 min read

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த துர்கா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  தனது இரண்டு மைனர் குழந்தைகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்கக் கோரி ஆட்கொணர்வு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த வெங்கடேஷ் ஆகியோரின் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை தல்லாகுளம் காவல்துறை ஆய்வாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மனுதாரரின் மனு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டது. அதில் இரு தரப்பினரையும் அணுகி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் குழந்தையை வைத்திருப்பது மனுதாரரின் கணவர் என்பதும் தெரியவந்தது. குழந்தைகளை யார் வைத்திருப்பது என்பது தொடர்பான விவகாரத்தில் இவர்கள் சம்பந்தப்பட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் அணுகி பிரச்சனையை முடித்துக் கொள்வதாக தெரிவித்தனர் என எழுத்துப்பூர்வமாக அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், மனுதாரரின் மைனர் குழந்தைகள் அவர்களது தந்தையிடம் இருப்பது சட்டவிரோதம் ஆகாது. எனவே மனுதாரர் கோரிய நிவாரணத்தை ஆட்கொணர்வு மனுவில் தீர்க்க இயலாது. எனவே சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தினை அணுகி தீர்வு பெறலாம் என உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com