ஈவெகி.சம்பத்யின் 98-வது பிறந்தநாள் கொண்டாட்டம்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யமூர்த்தி பவனில் மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவெகி.சம்பத்யின் 98-வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே எஸ் அழகிரி
ஈவெகி.சம்பதின் பேச்சாற்றல் மற்றும் உழைப்பிற்கு நிகரானவர்கள் யாரும் இல்லை என்பதை எனது கருத்து. கல்லூரி காலத்தில் அவர் பேச்சைக் கேட்பதற்காக அலைந்து திரிந்து இருக்கிறேன். அவர் அழுத்தம் திருத்தமாகவும் எந்த இடத்தில் எதை பேச வேண்டும் என்ற பேச்சாற்றலை உடையவர். அவரைப் போல பேச வேண்டும் என ஆசைப்பட்டேன். இன்றைக்கு ஓரளவுக்கு நான் பேசுவதற்கு காரணம் என்னுடைய குருநாதர் சம்பத் அவர்கள் தான்.
மேலும் படிக்க | பாஜக நாட்டின் ஒற்றுமை நல்லிணக்கத்தை குலைக்க முயற்சி - துரை வைகோ
பிஜேபி மறைமுகம் - சீமான் வெளிப்படை
வட மாநில தொழிலாளர்களை குறித்து ஒரு சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகின்றனர். குறிப்பாக பிஜேபி ஆர் எஸ் எஸ் மறைமுகமாக செய்கிறார்கள் சீமான் வெளிப்படையாக செய்கிறார்கள், இவர்கள் இரண்டு பேர்தான் காரணம்.
சீமான் தன்னுடைய விளம்பரத்திற்காக தமிழக மக்களுக்கும் வட இந்தியர்களுக்கும் இடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறார், வேண்டும் என்றே திட்டமிட்டு இது போன்று செய்து வருகின்றனர். தொழிலாளர்களுக்கு மாநிலம் ஜாதி மொழி கிடையாது. அவர்களுக்கு கை உண்டு கால் உண்டு வயிறு உண்டு ஒருவேளை சோற்றுக்காக இங்கே உழைக்க வருகிறார்கள். சீமான் பேச்சு அவருக்கு தண்டனை கொடுக்கும் அளவிற்கு இருக்கிறது.
சிங்கப்பூர் போன்ற இடங்களில் நம் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு எதிராக நடந்ததெல்லாம் நாம் சும்மா இருப்போமா? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்னதுதான் தமிழ் மரபு. எனவே தமிழக அரசு உடனடியாக அம்பு எய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த பிரச்சினைக்கு 10 ஆண்டுகளாக சீமான் தான் காரணம். ரயில்வே மற்றும் வங்கியில் பணி செய்பவர்கள் வேறு தொழிலாளர்கள் பணி வேறு. 10 வருடங்களாக ஒரு விஷயத்தை பேசி வந்தால் அது நியாயமாகுமா" என தெரிவித்தார்.