தி்முகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் கொலை... திமுக சமூக விரோத சக்தி...கொந்தளிக்கும்  எச்.ராஜா!  

தி்முகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் கொலை... திமுக சமூக விரோத சக்தி...கொந்தளிக்கும்  எச்.ராஜா!  

தி்முகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த வடிவேலு என்பவர் திமுகவினரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
Published on

தி்முகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த வடிவேலு அவர்கள் திமுகவினரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

வடிவேலு என்பவர் ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள நாகராஜபுரம் பகுதியை சேர்ந்தவர்.திமுகவில் வார்டு செயலாளராக இருந்த வடிவேலு கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். அதன் காரணமாக வடிவேலுவுக்கும்,அதே பகுதியை சேர்ந்த முன்னாள் திமுக கவுன்சிலர் ஈஸ்வரமூர்த்திக்கும் முன்பகை இருந்துள்ளது.அவர்கள் இருவரும் தலவுமலை விநாயகர் கோயிலில் இருந்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.கோபமடைந்த ஈஸ்வரமூர்த்தி என்பவர் கீழே இருந்த கல்லை எடுத்து வடிவேலுவை சரமாரியாக தாக்கியுள்ளார்.அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இதைதொடர்ந்து அடுத்த நாள் பார்க்கும் போது வடிவேல் உயிரிழந்து கிடந்துள்ளார்.இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டு ,அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், தி்முகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த வடிவேலு அவர்கள் திமுகவினரால் அடித்துக் கொல்லப்பட்டார் என்ற செய்தி பரவத்தொடங்கியது. இதை கண்டித்து பாஜக எம்எல்ஏ சரஸ்வதி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தி்முகவிலிருந்து விலகி பாஜக வில் இணைந்த வடிவேலு அவர்கள் திமுக வினரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. திமுக சகிப்புத் தன்மையற்ற சமூக விரோத சக்தி என்று நிரூபணம் ஆகியுள்ளது என தெரிவித்துள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com