பிரதமரை வரவேற்பது நமது கடமை....கனிமொழி எம்.பி...!

பிரதமரை வரவேற்பது நம் கடமை, அரசியல் கருத்தியல் என்பது வேறு என திமுக எம்.பி., கனிமொழி கூறியுள்ளார்.
பிரதமரை வரவேற்பது நமது கடமை....கனிமொழி எம்.பி...!
Published on
Updated on
1 min read

லயோலா கல்லூரி மாற்று ஊடக மையம் இல்லம் தேடி கல்வி_ பள்ளிக்கல்வி துறை சார்பில் 9 ஆம் ஆண்டு வீதி விருது விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் துவக்க நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், 

கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் கூடிய விரைவில் ஆய்வரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு ஒரு பெரிய திருவிழாவாக கொண்டாட ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டும் என தெரிவித்தார்.

அரசுக்கு மக்களை காக்க வேண்டும் என்ற கடமை உள்ளது. மக்கள் பாதுகாப்பு மிகவும் முக்கியம். அதே நேரத்தில் திருவிழாக்கள் நடைபெறாமல் இருக்கும் பட்சத்தில் கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்க அரசு ஒரு வழிவகை செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார்.

மேலும் மத்தியில் இருந்து மாநில திட்டங்களை தொடங்க வர இருக்கும் பிரதமரை வரவேற்பது நமது கடமையாகும் என கூறிய அவர், அரசியல் கருத்தியல் என்பது வேறு என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், சென்ற அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எதிராக கொண்டுவந்த சட்டங்கள் அதிகம், ஆகையால் மக்களுக்கு  எதிரான எதையும் திமுக என்றும் ஏற்றுக்கொள்ளாது. மக்களுக்கு எதிரான திட்டங்களை அரசாங்கம் ஒருபோதும் ஆதரிக்காது என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com